For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

#fridaysforfuture.. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிறுமி.. என்ன செய்தார் தெரியுமா?

ஸ்வீடன் நாட்டு சிறுமி பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

ஸ்டாக்ஹோம்: ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயது இளம் பெண்ணின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயது இளம் பெண் கிரேட்டா தன்பர்க். இவர் பள்ளியில் படிக்கும் போதே பருவ நிலை மாற்றத்துக்கு எதிராக போராடி வருகிறார். முதல் முறையாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்வீடன் நாட்டு நாடாளுமன்ற வளாகத்தி பள்ளி மாணவ, மாணவியரை திரட்டி பருவ நிலை மாற்றத்துக்கு எதிராக போராடினார். இது அனைவரது கனவத்தையும் ஈர்த்தது.

இதையடுத்து, டிவிட்டரில் ப்ரைடேஸ் பார் தி பியூட்சர் (#fridaysforfuture) என்ற ஹேஷ்டேகை உருவாக்கினார். இது உலகம் முழுவதும் டிரெண்டிங்கானது. கிரேட்டா தன்பர்க் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று, பருவ நிலை மாற்றத்துக்காக போராடி வருகிறார்.

உங்களுக்கு 'இந்த' வைரல் டான்ஸ் தெரியுமா? உங்களுக்கு 'இந்த' வைரல் டான்ஸ் தெரியுமா?


ஐநா சபையில் உரை:

ஐநா சபையில் உரை:

கடந்த டிசம்பர் மாதம் போலாந்தில் நடைபெற்ற ஐ.நா. சபை கூட்டத்தில் பருவ நிலை மாற்றம் குறித்து கிரேட்டா உரையாற்றினார். அதில் இருந்து சர்வதேச அளவில் அவரது பெயர் கவனிக்கப்பட துவங்கியது. இதேபோல் கடந்த ஜனவரி மாதம் தேவாசில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் அவர் கலந்துகொண்டு, பருவ நிலை மாற்றம் குறித்து பேசினார்.

நோபல் பரிசு:

நோபல் பரிசு:

இந்நிலையில், கிரேட்டா தன்பர்க்கின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நார்வே நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரேட்டி ஆண்ட்ரு கிரேட்டா பெயரை பரிந்துரைத்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர்,

"நாங்கள் ஏன் கிரேட்டா பெயரை பரிந்துரைத்தோம் என்றால், பருவ நிலை மாற்றத்துக்காக நாம் எதுவும் செய்யவில்லை என்றால், அது யுத்தத்தில் தான் போய் முடியும். பருவ நிலை மாற்றத்துக்காக கிரேட்டா நிறைய காரியங்களை செய்து வருகிறார்", என்றார்.

கவுரவம்:

கவுரவம்:

நோபல் பரிசுக்கு தனது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறித்து கிரேட்டா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர், " இதை நான் மிகவும் கவுரவமாக பார்க்கிறேன்", என தெரிவித்துள்ளார்.

சாதனை:

சாதனை:

ஒருவேளை அமைத்திக்கான நோபல் பரிசை கிரேட்டா பெற்றால், அது தான் மிக குறைந்த வயதுடைய ஒருவர் நோபல் பரிசை பெற்றவர் ஆவார். ஏனெனில், இதற்கு முன்பு பாகிஸ்தானை சேர்ந்த மலாலா, தனது 17வது வயதில் நோபல் பரிசை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

English summary
Greta Thunberg, the Swedish schoolgirl who has inspired an international movement to fight climate change, has been nominated as a candidate to receive this year's Nobel Peace Prize.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X