For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலக நாடுகளை ஆட்கொள்ளும் புதிய பீதி: சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சல்!

Google Oneindia Tamil News

பீஜிங்: ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் எனப்படும் ஒரு வகை பன்றி காய்ச்சல் சீனா, மலேசியா, வியட்நாம், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.

உலகளவில் பன்றிகளின் தாயகமாக விளங்கும் சீனா, 2018 ஆம் ஆண்டில் முதன்முதலில் பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்தது. ஹெபீ, ஹெனன் போன்ற இடங்களில் பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 பயிர் கடன்களுக்கு வட்டி ரத்து.. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்.. மகாராஷ்டிர அரசு அதிரடி அறிவிப்பு பயிர் கடன்களுக்கு வட்டி ரத்து.. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்.. மகாராஷ்டிர அரசு அதிரடி அறிவிப்பு

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தகவல்கள் ஏதும் கூறவில்லை. இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த தடுப்பூசி எதுவும் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பன்றிக் காய்ச்சல் பாதிப்பு

பன்றிக் காய்ச்சல் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா இன்னும் அடங்காமல் ஆட்டம் போட்டு வருகிறது. இதை சமாளிக்க ஒவ்வொரு நாடுகளும் படாதபட்டு வரும் நிலையில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பரவிய பறவைக் காய்ச்சல் மக்களை வாட்டி எடுத்தது. இது போதாதென்று தற்போது பன்றிக் காய்ச்சல்வேறு, பல நாடுகளில் குறிப்பாக ஆசிய நாடுகளில் பரவி பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து பரவியதால் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பன்றி காய்ச்சல் சீனா, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.

சீனாவில் கடும் பாதிப்பு

சீனாவில் கடும் பாதிப்பு

உலகளவில் பன்றிகளின் தாயகமாக விளங்கும் சீனா, 2018 ஆம் ஆண்டில் முதன்முதலில் பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்தது. ஹெபீ, ஹெனன் போன்ற இடங்களில் பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சிச்சுவான், யுன்னன் மற்றும் சின்ஜியாங். ஹாங்காங்கும் பாதிப்புகள் இருப்பதை தெரிவித்தன. சீனாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் பன்றி இறைச்சிக்கு பெரும் பங்கு உண்டு. பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை அந்த நாடு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

வியட்நாமில் 6 மில்லியன் பன்றிகள் எண்ணிக்கை குறைவு

வியட்நாமில் 6 மில்லியன் பன்றிகள் எண்ணிக்கை குறைவு

வியட்நாம் நாட்டில் இந்த ஆண்டு பிப்ரவரி பிற்பகுதியில் சுமார் 2,000 பன்றிகளை காய்ச்சல் தாக்கியது என்று வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. பன்றி காய்ச்சல் காரணமாக 2019 ஆம் ஆண்டில் இருந்ததை விட தற்போது சுமார் 6 மில்லியன் பன்றிகள் எண்ணிக்கை குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. மலேசியாவில் கடந்த மாதம் முதல் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியது. சபா மாகாணம் உள்பட பல இடங்களுக்கு பரவியது. இதனால் பன்றி இறைச்சி கூட்டங்களில் முன்னெடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக உள்ளன.

மனிதர்களுக்கு தீங்கு இல்லை

மனிதர்களுக்கு தீங்கு இல்லை

தென் கொரியாவில் கடந்த அக்டோபர் முதல் பாதிப்பு பதிவாகியது. ஏப்ரல் முதல் மே வரை காட்டுப்பன்றிகளின் இனப்பெருக்க காலத்திற்கு முன்னதாக தடுப்பு நடவடிக்கைகளை அதிகரித்து, இந்த வைரஸை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு அரசு கூறியுள்ளது. ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பன்றிகளுக்கு ஆபத்தானது. ஆனால் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தகவல்கள் ஏதும் கூறவில்லை. இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த தடுப்பூசி எதுவும் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் பன்றிக் காய்ச்சல் பரவி உள்ளதால் இந்தியாவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.

English summary
Swine flu, also known as African swine flu, is endemic in Asian countries, including China, Malaysia, Vietnam, and Malaysia
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X