For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாலியல் குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள்.. சுவிஸ் அரசு புதிய சட்டம்

Google Oneindia Tamil News

ஜெனிவா: சுவிட்சர்லாந்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகளை வழங்கும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டு சிக்குவோர், தங்களின் வாழ்நாள் முழுவதும் கடுமையான தண்டனைகளிலேயே கழிக்க வேண்டியிருக்கும்.

சுவிட்சர்லாந்து அரசு நேற்று குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கும் புதிய மசோதாவிற்கான வாக்கெடுப்பு நடத்தியது.

மொத்தம் 26 மண்டலங்களைக் கொண்ட அந்த நாட்டின் மக்கள் தொகையில் 63.5 சதவிகிதத்தினர் இந்த சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

கடுமையான விதிகள்:

இந்த முடிவு குழந்தை பாலியல் குற்றவாளிகளுக்கு எதிரான கடுமையான சட்ட விதிகளை சுவிஸ் நாட்டு நாடாளுமன்றம் செயல்படுத்த வழி வகுத்துள்ளது. அந்நாட்டில் இயங்கிவரும் ஒயிட் மார்ச் சங்கம் இதற்காக மிகவும் பாடுபட்டு வந்தது.

அரசாங்கம் கவலை:

முதலில் இத்தகைய குற்றவாளிகளுக்கென தண்டனை சட்டங்கள் ஏற்கனவே விதிமுறையில் இருக்கின்றன என்று அரசுத்தரப்பு கூறிவந்தது. மேலும் தண்டனையின் கடுமை குற்றத்தின் தன்மையையோ, சட்ட இயல்பு விளக்கங்களையோ மாற்றக்கூடியதாக அமைந்துவிடக்கூடும் என்ற தனது கவலையையும் அரசு தெரிவித்திருந்தது.

குழந்தைகள் வன்முறை:

ஆயினும் பத்து வயதுக்குட்பட்டவர்களிடம் தகாத முறையில் நடந்து கொள்பவர்களுக்கு குறைந்த பட்சம் ஆறு மாத சிறைத் தண்டனை மட்டுமே விதிக்கப்படுவதாகவும் இது கடுமையாக்கப்படவேண்டும் என்றும் ஒயிட் மார்ச் இயக்கம் கோரியது.

இளைஞர்களுக்கும் தண்டனை:

மேலும் ஒரு 20 வயது இளைஞன் 16 வயதுக்குட்பட்டவர்களிடம் தவறாக நடந்துகொண்டாலும், ஆபாசத்தைத் தூண்டும்விதமான பரிமாற்றங்களில் ஈடுபட்டாலும் புதிய சட்டத்தின்மூலம் அவன் தண்டிக்கப்படவேண்டும் என்று ஒயிட் மார்ச் சங்கம் வலியுறுத்தியது. இதையடுத்து கடுமையான விதிமுறைகளுடன் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடுமையான சட்டத் திருத்தம்:

நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பின் சாதகமான முடிவு குறித்து ஒயிட் மார்ச் சங்கத்தின் தலைவர் கிறிஸ்டின் பசட் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். இந்த வாக்கெடுப்பினைத் தொடர்ந்து சுவிஸ் நாடாளுமன்றம் பாலியல் குற்றவாளிகளுக்கு எதிரான ஐரோப்பாவின் கடுமையான சட்டங்களை இயற்ற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Switzerland government stricter it’s laws about the sexual harassment cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X