For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுவிட்சர்லாந்து குடிவரவுத் திணைக்களத்தின் செயலகம் ஞானலிங்கேச்சுரர் கோவிலுக்கு வருகை

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஜெனிவா: சுவிட்சர்லாந்து நடுவன் அரசின் குடிவரவுத்திணைக்களத்தின் செயலகம் இன்றும் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்கு வருகையளித்திருந்தது.

குவடிவுச் செயலகத்தின் செயலர் மாறியோ கற்ரிக்கெர் தலமையில் இணைச் செயலர் பார்பெறா பூசி அவர்களுடன் குடிரவுத்திணைக்கழகத்தின் 22 துறைசார் முகாமையாளர்களுடம் வருகை அளித்திருந்தனர்.

switzerland government officers visits gnalinkeshwarar temple

இச்செயலகத்தின் அதிகாரத்திற்குள் அகதிவிண்ணப்பம், குடியேற்றம், தாயகத்திற்கு மீளத்திரும்புதல், இசைவாக்க வாழ்வு, என்பன உள்டக்கப்பட்டுள்ளது.
01. 01. 2015 இத்திணைக்களம் குடிவரவுத்திணைக்கள் என்ற பெயரில் இருந்து நடுவன் அரசின் குடிவரவிற்கான அரசசெயலகம் என்ற பெயருடன் பல அதிகாரங்களைக்கொண்ட மையமாக மாறம்றம் பெற்றது.

சுவிட்சர்லாந்தில் நிரந்தரமாகக் குடியேருபர்கள் உள்நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது அதனைச் சரிபார்க்கும் பொறும்ப்பும் இத்திணைக்களத்தையே சாருகிறது. அதுபோல் 3வது நாடுகளில் இருந்து தொழில்முனைப்பில் குடியேறுபவர்களும் அதுபோல் தஞ்சம்கோருபவர்களின் விண்ணப்பத்தினை ஆய்வு செய்வதும் இத்திணைக்களத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும்போது சுவிஸ் நடுவன் அரசின் எதிர்பார்ப்பினை விண்ணப்பதாரர் நிறைவுசெய்திருக்கிறாரா என ஆய்வு செய்வதும் இத்திணைக்களம் ஆகும். அதுபோல் தஞ்சம் கோரி ஒருவர் சுயவிருப்பல் தனது தாயகத்திற்கு மீளத்திரும்ப ஏற்பாடு செய்துகொடுப்பதும் இவர்கள் ஆவர்.

பேர்ன் நகரில் அமைந்திருக்கும் தமிழ்வழிபாட்டுத் திருக்கோவிலுக்கு இத்துறைசார் அதிகாரிகள் 10. 05. 2017 புதன்கிழமை மேழத்திங்கள் முழுமதித் திருநாளில் நண்பகல் 11.30 மணிக்கு வருகை அளித்து தமிழர்களின் வாழ்வியல், சமயம், பண்பாடு மற்றும் இசைவு வாழ்வு தொடர்பான சைவநெறிக்கூடத்துடன் கருத்துக்களைப் பகிர்ந்ததுடன் ஞானலிங்கேச்சரர் திருக்கோவிலையும் சுற்றிப்பார்த்து, தமிழர் கலை வடிவத்தினையும் இரசித்தனர்.

நிறைவில் பல்சமய இல்லத்தின் வணக்கம் உணவக்த்தில் தமிழர் பண்பாட்டு உணவினை அறுசுவை விருந்தாக சுவைத்துச் சென்றனர். மேலும் சந்திப்புக்கள் தொடரும் என்ற வாசகத்துடன் இன்றைய நிகழ்வு நிறைவடைந்தது.

English summary
switzerland government officers today visits gnalinkeshwarar temple
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X