For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகிலேயே சுவிஸ் மக்கள் தான் ஹேப்பி அண்ணாச்சி: அப்போ நாம்?

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகிலேயே சுவிட்சர்லாந்தில் உள்ள மக்கள் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

சஸ்டெய்னபிள் டெவலெப்மென்ட் சொலுஷன்ஸ் நெட்வொர்க் நிறுவனம் உலகில் எந்தெந்த நாடுகளில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த நிறுவனம் கடந்த 2012ம் ஆண்டில் இருந்து அந்த ஆய்வை ஆண்டுதோறும் நடத்தி மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

2014ம் ஆண்டில் எந்தெந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்பது குறித்து 158 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து

உலக நாடுகளிலேயே சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மக்கள் தான் அதிக மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்தை அடுத்து ஐஸ்லாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

கனடா

கனடா

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் டென்மார்க் 3வது இடத்திலும், நார்வே 4வது இடத்திலும், கனடா 5வது இடத்திலும், பின்லாந்து 6வது இடத்திலும், நெதர்லாந்து 7வது இடத்திலும், ஸ்வீடன் 8வது இடத்திலும், நியூசிலாந்து 9வது இடத்திலும், ஆஸ்திரேலியா 10வது இடத்திலும் உள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள நாடுகளில் பல பணக்கார நாடுகள் ஆகும். இந்த பட்டியலில் அமெரிக்காவுக்கு 15வது இடம் தான் கிடைத்துள்ளது.

இந்தியா

இந்தியா

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 117வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இங்கிலாந்து 21வது இடத்திலும், பிரான்ஸ் 29வது இடத்திலும், ஜெர்மனி 26வது இடத்திலும் உள்ளது.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான், போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, ஆப்பிரிக்காவில் உள்ள டோகோ, புருண்டி, பெனின், ருவாண்டா, புர்கினா பசோ, ஐவரி கோஸ்ட், கினியா மற்றும் சாட் ஆகிய 10 நாடுகள் மிகவும் மகிழ்ச்சி குறைவான நாடுகள் ஆகும்.

English summary
According to a recent research, Switzerland is the world's happiest nation while India stands 117th in the list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X