For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உரிய நேரத்தில் வார்னிங்.. அபுதாபியிலிருந்து 349 பயணிகளுடன் சிட்னி சென்ற எதிஹாட் விமானம் தப்பியது

அபுதாபியிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நோக்கி புறப்பட்ட எதியாட் பயணிகள் விமானம் அவசர அவசரமாக தரையிறங்கியது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சிட்னி: அபுதாபியிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நோக்கி புறப்பட்ட எதிஹாட் பயணிகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறங்கியது.

அபிதாபியில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு எதிஹாட் பயணிகள் விமானம் வந்து கொண்டிருந்தது. அதில் 349 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் இன்று அதிகாலை 5 மணிக்கு ஆஸ்திரேலிய பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்து புகை வெளியேறியதைக் குறிக்கும் வகையில் எச்சரிக்கை விளக்கு எரிந்தது.

 Sydney-bound Etihad flight makes emergency landing in Adelaide

இதனைக் கவனித்த பைலட், விமானத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என நினைத்து, அருகில் உள்ள அடிலெய்டு விமான நிலையம் நோக்கி விமானத்தை திருப்பினார். விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்ததும் விமானம் அடிலெய்டு விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, விமானத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து சோதனை செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓடுபாதையின் அருகில் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர்.

English summary
A plane travelling from Abu Dhabi to Sydney was forced to make an emergency landing at Adelaide Airport due to a technical fault on board.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X