For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்ண கொடூரர்கள்.. காட்டுத்தீயை வேண்டுமென்றே தொடங்கிய 24 பேருக்கு மரணதண்டனை.. சிரியா அரசு அதிரடி

சிரியாவில் காட்டுத்தீயை தொடங்கிய 24 பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது

Google Oneindia Tamil News

டமாஸ்கஸ்: சிரியாவில் காட்டுத்தீயை வேண்டுமென்றே தொடங்கிய 24 பேருக்கு மரண தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிரியாவில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த வருடம் திடீரென காட்டுத்தீ பரவியது... இந்த காட்டுத்தீ பக்கத்தில் இருந்த 3 மாகாணங்களுக்கு பரவியது.

பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட் பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்

இதனால் அந்தந்த பகுதி வனப்பகுதிகளில் வசித்து வந்த மக்கள் கதறி கொண்டு காட்டை விட்டு வெளியேறினர்.. குழந்தைகளுடனும், உடைமைகளுடனும் உயிரை கையில் பிடித்து கொண்டு வேறு வேறு பகுதிகளுக்கு வெளியேறும் போட்டோக்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி அனைவரையும் கலங்கடித்தது..

வீடியோ

வீடியோ

ஆனாலும், இந்த காட்டுத்தீயானது பெருத்த சேதத்தை மொத்தமாக ஏற்படுத்தி விட்டது.. பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஏற்பட்ட 187 காட்டுத்தீ சம்பவத்தில் 280 நகரங்கள் மற்றும் கிராமங்கள் பாதிக்கப்பட்டதாக அந்த நாட்டு அரசு செய்தி வெளியிட்டது.. இந்த காட்டுத்தீயால் 32 ஆயிரம் ஏக்கர் காட்டில் உள்ள விவசாய நிலங்கள் அழிந்தன.. 370 வீடுகள் எரிந்து சாம்பலாயின.. காட்டுத்தீயில் 3 பேர் கருகி உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் சிரியாவில் பெருத்த அதிர்ச்சியை உண்டுபண்ணியது.

விசாரணை

விசாரணை

இதையடுத்து, இந்த காட்டுத்தீ ஏற்பட என்ன காரணம் என்ற விசாரணையையும் மறுபக்கம் அதிகாரிகள் தொடங்கினார்கள்.. அப்போதுதான், காட்டுத்தீ வேண்டுமென்றே தொடங்கப்பட்ட ஒன்றுதான் என்றும், அதில் 24 பேர் சம்பந்தப்பட்டதாகவும் கூறி போலீசார் அவர்களை கைது செய்தனர்... கைது செய்யப்பட்ட 24 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.. இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் விசாரணை இத்தனை காலமும் நடந்து வந்தது.

 தண்டனை

தண்டனை

இந்நிலையில், காட்டுத்தீயை வேண்டுமென்றே தொடங்கிய வழக்கில் 24 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.. கோர்ட் உத்தரவையடுத்து, 24 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சிரியா நீதித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. வழக்கமாக, போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது என்பது பொதுவானது என்றாலும், காட்டுத் தீ விவகாரத்துக்காக 24 பேருக்கு மரண தண்டனை என்பது இப்போதுதான் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தண்டனை

தண்டனை

சிரியாவின் இந்த 10 கால மோதலில் நூறாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.. இதைதவிர, நாட்டிற்கு வெளியே ஐந்து மில்லியன் அகதிகள் குடியேறி உள்ளனர்.. தொடர்ந்து பல்வேறு அச்சுறுத்தல்களில் அந்த நாடு சிக்கி வந்து கொண்டிருப்பதால், சிரிய நாட்டு மக்கள் கலக்கத்தில் உள்ளதாகவே கூறப்படுகிறது.

English summary
Syria's government says it has executed 24 people convicted of deliberately starting deadly wildfires last year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X