For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிரியாவில் உள்நாட்டு போர் முடிவுக்கு வருகிறது! போராளிகள் ஹோம்ஸ் நகரை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனர்!!

By Mathi
Google Oneindia Tamil News

ஹோம்ஸ்: சிரியாவில் அதிபர் ஆசாத்தின் அரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டு வந்த போராளிகள் தங்களது வசம் இருந்த முக்கிய நகரமான ஹோம்ஸை ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்துள்ளனர்.

சிரியாவில் 3 ஆண்டுகளுக்கு "அரபு வசந்தம்" என்ற பெயரில் புரட்சி வெடித்தது. அதிபர் ஆசாத் பதவி விலகக் கோரி புரட்சியில் பல்லாயிரக்கணக்கான போராளிகள் இறங்கினர்.

முதலில் ஹோம்ஸ் என்ற மிக முக்கிய நகரை தம் வசமாக்கினர் போராளிகள். அங்கு ராணுவத்துக்கு சொந்தமான இடங்களை தகர்த்து எறிந்தனர். போராளிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையேயான முக்கிய போர் முனையாக இருந்தது ஹோம்ஸ் நகரம்.

Syria rebels surrender strongholds in Homs

இந்த நகரைவிட்டு லட்சக்கணக்கணக்கான மக்கள் வெளியேறிவிட்டனர். கடந்த 3 ஆண்டுகளாக ஹோம்ஸ் நகரில் போராளிகள் மட்டுமே இருந்தனர்.

இந்நிலையில் போராளிகளுக்கும் அரசு தரப்பும் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் அடிப்படையில் ஹோம்ஸ் நகரில் முற்றுகையிட்டிருந்த ஆயிரக்கணக்கான போராளிகள் ராணுவத்திடம் சரணடைந்தனர்.

அவர்கள் பேருந்துகளில் ஏற்றப்பட்டு ஹோம்ஸ்நகரை விட்டு வெளியேற்றப்பட்டனர். 3 ஆண்டுகளுக்குப் பின்னர் சிரியா ராணுவம் தற்போது ஹோம்ஸ் நகரை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

போராளிகள் வசம் இருந்த ஹோம்ஸ் நகரம் கைவிடப்பட்டுவிட்டதால் சிரியாவில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வர இருக்கிறது. வரும் ஜூன் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் போராளிகள் சரணடைந்திருப்பதும் ஹோம்ஸ் நகரை கைவிட்டிருப்பதும் அதிபர் ஆசாத் தரப்புக்கு மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

English summary
Carrying their rifles and small bags of belongings, hundreds of exhausted Syrian rebels withdrew Wednesday from their last remaining strongholds in the heart of Homs, surrendering to President Bashar Assad a bloodstained city that was once the center of the revolt against him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X