For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில்.. துருக்கி அதிரடி தாக்குதல்.. 16 ராணுவ வீரர்கள் பலி

Google Oneindia Tamil News

அங்காரா: சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் திடீரென துருக்கி படையினர் குறி வைத்துத் தாக்குதல் நடத்தியதில் 16 சிரிய ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் தொடங்கிய நிலையில் தற்போது உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்து கடைசி இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற சிரிய அரசு படைகள் தீவிரமாக முயற்சித்து வருகிறது.

Syrias 16 soldiers were killed in Syria by Turkey

சிரிய அரசு படையினருக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. போராளிகள் குழுக்களுக்கு துருக்கி ஆதரவு அளிக்கிறது. சிரிய எல்லைக்குள் துருக்கி தனது படைகளை குவித்து வருகிறது. இந்த நடவடிக்கைகளால் உள்நாட்டில் தொடங்கிய இந்த சண்டை தற்போது சிரியா- துருக்கி இடையே போர் பதற்றத்தை எட்டியுள்ளது.

இதனிடையே போராளிகள் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த இட்லிப் மாகாணத்தில் பாரா, பிலியன் நகரங்களில் சிரியா மற்றும் ரஷ்யாவின் கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதில் துருக்கி வீரர்கள் 34 பேர் பலியாகிவிட்டனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு.. பலி எண்ணிக்கை 2,835 ஆக உயர்வுசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு.. பலி எண்ணிக்கை 2,835 ஆக உயர்வு

இதற்கு பதிலடியாக இட்லிப் மாகாணத்தில் உள்ள சிரிய படையினரின் நிலைகளை குறிவைத்து துருக்கி வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் சிரிய அரசு படை வீரர்கள் 16 பேர் பலியாகிவிட்டனர்.

English summary
Tension escalate between Turkey and Syria as 16 troops were killed by Turkey's retaliation after their troops killed by Syria.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X