For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனாவுக்கு முன் சின்ன ஹோட்டல்தான்.. ஆனால் இப்ப மிகவும் பிரபலம்.. காரணத்தை கேட்டால் அசந்துடுவீங்க!

Google Oneindia Tamil News

ஸ்டாக்ஹோம்: ஸ்வீடனில் ஒரு சிறிய ஹோட்டல் கொரோனாவுக்கு பின்னர் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. காரணம் சமூக விலகல்தான்.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த எண்ணிக்கை 43 லட்சத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்புகளும் 3 லட்சத்தை நெருங்கிவிட்டது.

இந்த தொற்றுநோயிலிருந்து தப்பிக்க பொது இடங்களில் முகக் கவசம் அணியவும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் அவசியம் என மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

சீனா அதிரடி.. ஒட்டு மொத்த வூஹான் நகர மக்கள் 1.1 கோடி பேருக்கும் கொரோனா டெஸ்ட்.. காரணம் இதுதான்சீனா அதிரடி.. ஒட்டு மொத்த வூஹான் நகர மக்கள் 1.1 கோடி பேருக்கும் கொரோனா டெஸ்ட்.. காரணம் இதுதான்

கொரோனா

கொரோனா

ஸ்வீடன் நாட்டில் கொரோனாவால் 27 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 3,313 பேர் பலியாகிவிட்டனர், 4 ஆயிரம் பேர் வீடுகளுக்கு திரும்பிய நிலையில் 19 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாதிப்பு குறைவாக இருக்கும் போதிலும் இங்கு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.

சிறிய நகரம்

சிறிய நகரம்

பெரும்பாலான மக்கள் அரசின் வழிகாட்டுதல்களின்படி நடக்கிறார்கள். இதற்கு உதாரணம் அங்குள்ள ஒரு ஹோட்டல். ஆம் உணவகத்தில் புதுமையை ஸ்வீடன் புகுத்தியுள்ளது. ரான்சீட்டரில் பார்ட் பார் எம் என்ற சிறிய நகரம் உள்ளது. இங்குதான் அந்த ஹோட்டல் உள்ளது.

உணவு

உணவு

அந்த ஹோட்டல் திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு டேபிள், சேர் போடப்பட்டிருக்கும். அதில் ஒருவர் மட்டுமே அமர்ந்து சாப்பிட முடியும். இந்த ஹோட்டலுக்கு சர்வர் எல்லாம் கிடையாது. ஒரு கயிற்றில் கூடை கட்டப்பட்டிருக்கும். அதில்தான் உணவு இருக்கும்.

நெகிழ்ச்சி

நெகிழ்ச்சி

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பின்னர் மக்களின் வாழ்க்கையில் மாற்றம் இருந்தால் மட்டுமே அந்த வைரஸிலிருந்து மீளலாம் என வல்லுநர்கள் கூறி வரும் நிலையில் இந்த ஹோட்டல் சமூக விலகலை கடைப்பிடிப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

இதை ஸ்வீடனைச் சேர்ந்த தம்பதி ரஸ்முஸ் பெர்சன் மற்றும் லின்டா கார்ல்சன் ஆகியோர் நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு இணையம் மூலம் பாராட்டுகள் குவிகின்றன. ரஸ்முஸ் பெர்சன் உணவை சமைத்து தயார் செய்து தருவார். அவரது மனைவி அதை கூடையில் வைத்து கயிறு வழியாக வாடிக்கையாளருக்கு அனுப்புவார்.

English summary
Table for One restaurant in Sweden serves only one guest in a open field for maintaining social distance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X