For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொறுக்க மாட்டோம்.. சீனாவை கலங்க வைக்கும் குட்டி தீவு.. தைவான் அளித்த வார்னிங்.. உச்ச கட்ட மோதல்!

Google Oneindia Tamil News

தைபே: தைவான் எல்லையில் சீனா அத்துமீறுகிறது, சீனாவின் போர் விமானங்கள் தைவான் எல்லைக்குள் வந்தால் மிக மோசமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தைவான் அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவிற்கு அருகே தென் சீன கடல் பகுதியின் மேற்கு பகுதியில் இருக்கும் குட்டி தீவுதான் தைவான். தனி நாடான தைவானை, சீனா தனக்கு சொந்தமான பகுதி என்று உரிமை கோரி வருகிறது. இரண்டாம் உலகப் போர், சீனாவின் சிவில் வார் என்று வரிசையாக நடந்த பல போர்களில், தைவானை கைப்பற்ற சீனா முயன்றது.

தற்போது மீண்டும் தைவானை கைப்பற்றுவதில் சீனா தீவிரமாக முயன்று வருகிறது. லடாக்கில் இந்தியாவுடன் ஒரு பக்கம் மோதி வரும் சீனா, இன்னொரு பக்கம் தைவானை கைப்பற்ற களமிறங்கி உள்ளது.

எங்கள் போர் விமானத்தை தைவான் தாக்கவில்லை.. பொய்யான செய்தி.. மறுப்பு தெரிவித்த சீனா.. பின்னணி!எங்கள் போர் விமானத்தை தைவான் தாக்கவில்லை.. பொய்யான செய்தி.. மறுப்பு தெரிவித்த சீனா.. பின்னணி!

ஏன் இப்படி

ஏன் இப்படி

அதிலும் கடந்த 2016ம் ஆண்டு தைவான் அதிபராக டிசாய் இங் வான் தேர்வு செய்யப்பட்டார். இவர் தைவான் தனி நாடு கொள்கையில் உறுதியானவர். இவரின் வருகையை தொடர்ந்து தைவான் உடன் உறவை மொத்தமாக சீனா முறித்துக் கொண்டது. இதனால்தான் தற்போது மொத்தமாக தைவானை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர சீனா முயன்று வருகிறது.

சீனா கொள்கை

சீனா கொள்கை

தைவானை அச்சுறுத்தும் வகையில் சீனா கடல் எல்லையில் ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தைவானும் இரண்டு நாட்கள் முன் ஏவுகணை தாக்குதலை செய்து வருகிறது. தைவானுக்கு அமெரிக்காவும் இன்னொரு பக்கம் ஆதரவு அளித்து வருகிறது. தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா போர் விமானங்கள், போர் கப்பல்களை அனுப்பி உள்ளது.

கோபம் அடைந்தது

கோபம் அடைந்தது

இதனால் கோபம் அடைந்த சீனா தற்போது தைவானுக்கு போர் விமானங்களை அனுப்பி உள்ளது. தைவான் எல்லைக்குள் நேற்று முதல் நாள் போர் விமானம் ஒன்று நுழைந்தது. அதன்பின் நேற்று 4 போர் விமானங்கள் தைவான் உள்ளே நுழைந்தது.சீனாவின் சுகோய் 30, ஜெ 20 போன்ற அதி நவீன விமானங்கள் தைவான் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் அத்துமீற முயன்று இருக்கிறது.

கடும் எச்சரிக்கை

கடும் எச்சரிக்கை

சீனா இப்படி தொடர்ந்து இரண்டு நாட்களாக எல்லையில் அத்துமீற முயன்றதை தைவான் கடுமையாக எச்சரித்துள்ளது. சீனாவிற்கு அஞ்சாமல் கடுமையான எச்சரிக்கையை தைவான் விடுத்துள்ளது. அதில், தைவான் எல்லையில் சீனா அத்துமீறுகிறது, சீனாவின் போர் விமானங்கள் தைவான் எல்லைக்குள் வந்தால் மிக மோசமான நடவடிக்கை எடுக்கப்படும்.எல்லையில் இருக்கும் நாடுகள் உடன் சீனா மோதலை கடைபிடிக்கிறது.

போர் விமானமும்

போர் விமானமும்

சீனாவின் போர் விமானங்கள் எங்கள் எல்லைக்குள் வந்தது.சீன போர் விமானங்கள் இனி தைவான் உள்ளே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் எல்லையை காக்க எதுவும் செய்ய தயார். நீங்கள் கோட்டை தாண்ட நினைக்கிறீர்கள். தவறு செய்ய நினைக்கிறீர்கள். அது இனியும் நடக்காது. எங்களுக்கு அமைதி முக்கியம். எங்கள் நாட்டு மக்களை காக்க நாங்கள் எதுவும் செய்ய தயார்.

இனியும் பொறுக்க மாட்டோம்

இனியும் பொறுக்க மாட்டோம்

கடந்த இரண்டு நாட்களாக சீனாவின் போர் விமானங்கள் எங்கள் தீவின் எல்லைக்குள் வந்து சென்றுள்ளது. இனியும் நாங்கள் பொறுக்க மாட்டோம். எங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். சீனா அனைத்தையும் நிறுத்த வேண்டும்.முக்கியமாக தென்மேற்கு வியட்நாமில் சீனா விமானப்படையை அனுப்புவதை கொஞ்சம் கூட ஏற்க முடியாது.

தயார் நிலை

தயார் நிலை

உலக நாடுகளின் அமைதியை குலைக்கும் வகையில் சீனா செயல்படுகிறது,என்று தைவான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் தைவான் தற்போது தனது எல்லையில் போர் விமானங்களை குவித்து உள்ளது. அதேபோல் போருக்கு தயாராகும்படி தனது நாட்டு ராணுவத்திற்கு தைவான் பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

English summary
Taiwan warns China after its warplane crosses the border the 2nd day in the row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X