For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தற்கொலை தாக்குதல் நடத்தியவர்களின் குடும்பங்களுக்கு நிலம், வெகுமதி.. தலிபான்கள் அதிரடி

தற்கொலை தாக்குதல் நடத்தியவர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

காபூல்: அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியவா்களின் குடும்பங்களுக்கு சிறப்பு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.. அந்த குடும்பங்களுக்கு நிலம் வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்து இருக்கிறார்கள்.

கடந்த 20 வருடங்களுக்கு பிறகு ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர்.. கடந்த ஆகஸ்ட் இறுதியில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் கெடுவிதிக்கப்பட்டு முற்றிலுமாக வெளியேறின.

இதைதவிர, ஆட்சி அமைப்பதில் நிறைய குழப்பங்கள், சிக்கல்கள் தாலிபான்களுக்குள் நடந்து வருகிறது.. மற்றொரு பக்கம், தாலிபான்கள் ஆட்சி எப்படி இருக்குமோ என்று நினைத்து ஆப்கன் மக்கள் நிலைகுலைந்து பயந்து போயுள்ளனர்..

சோம்நாத் கோவிலை தாக்கியவரின் நினைவிடத்தில்.. தாலிபான் திடீர் சிறப்பு மரியாதை.. இந்தியாவிடம் சீண்டல்?சோம்நாத் கோவிலை தாக்கியவரின் நினைவிடத்தில்.. தாலிபான் திடீர் சிறப்பு மரியாதை.. இந்தியாவிடம் சீண்டல்?

நிகழ்ச்சி

நிகழ்ச்சி

இந்நிலையில், தலைநகர் காபூலில் உள்ள 2 நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.. அதில், தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்த தலிபான் இயக்கத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்..
அந்த நிகழ்ச்சியில் அந்நாட்டின் உள்துறை அமைச்சா் சிராஜுதீன் ஹக்கானியும் பங்கேற்றிருந்தார். அப்போது அவர் பேசும்போது சொன்னதாவது:

 ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க படையினர் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியவர்களை பாராட்டினார்.. புகழ்ந்து தள்ளினார்.. அவர்களை தியாகிகள் என்றார்.. ஆப்கானிஸ்தான் நாட்டின் வீரர்கள் என்றார்.. இஸ்லாம் மதத்தின் ஹீரோக்கள் என்றார். அதுமட்டுமல்ல, அந்த நிகழ்ச்சி முடிந்ததுமே, தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த தலிபான் இயக்கத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு தலா 10,000 ஆப்கன் நாணயம் ஆப்கனிக்களை வழங்கினார்..

Recommended Video

    அரங்கேறும் Taliban-களின் கொடூர தண்டனைகள் | Afghanistan Updates | Oneindia Tamil
    ஹைலைட்

    ஹைலைட்

    கடைசி ஹைலைட்டாக, ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிலம் வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். இது அத்தனையையும், அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் சயீத் கோஸ்தி ட்வீட் போட்டு வெளிப்படுத்தினார்.. இந்த ட்வீட்தான் வைரலாகி கொண்டிருக்கிறது.. அதற்கு ஏராளமானோர் திரண்டு வந்து தங்கள் கமெண்ட்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்..

    பயங்கரவாதிகள்

    பயங்கரவாதிகள்

    ஒருபக்கம் உலக நாடுகளின் முன், தலிபான்கள் தங்களை பொறுப்பான ஆட்சியாளர்களாக நிலைநிறுத்தி கொள்ள முயற்சிக்கிறார்கள்.. மற்றொரு பக்கம், தற்கொலை தாக்குதல் நிகழ்த்திய தலிபான் பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்று அறிவித்தும் உள்ளனர்.. இது அந்த இயக்கத்தின் தலைமையின் அணுகுமுறையில் உள்ள முரண்பாட்டையே வெளிப்படுத்துகிறது என்று கூறுகின்றனர்.

    English summary
    Taliban calls suicide bombers Heroes of Islam promise rewards to their families and tweeted
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X