For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'பயங்கரம்..' 4 பேரை கொடூரமாக கொன்று பொது இடத்தில் தொங்கவிட்ட தாலிபான்கள்.. காரணத்தை கேட்டால் ஷாக்

Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தானில் நான்கு கடத்தல்காரர்களைக் கொன்று அவர்களின் உடல்களைத் தாலிபான்கள் கிரேன்களில் தொங்கவிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    4 பேரை கொடூரமாக கொன்று பொது இடத்தில் தொங்கவிட்ட தாலிபான்கள் | Oneindia Tamil

    ஆப்கனில் இருந்நது அமெரிக்கப் படைகள் வெளியேற பிறகு இப்போது தாலிபான்களின் ஆட்சியே அங்கு நடைபெற்று வருகிறது. அவர்கள் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைநகர் காபூலை கைப்பற்றினர்.

    திமுகவுக்கு வாக்களிக்காமல் போய்விட்டேனே.. வருந்திய சேலம் பெண்.. நடந்தது என்ன? திமுகவுக்கு வாக்களிக்காமல் போய்விட்டேனே.. வருந்திய சேலம் பெண்.. நடந்தது என்ன?

    முன்பு இருந்த ஆட்சியைப் போல இருக்காது என்றும் அனைவரையும் ஒருங்கிணைத்த ஒரு ஆட்சியாகவே இது இருக்கும் என்றும் தாலிபான்கள் கூறி வருகின்றனர். ஆனால், தாலிபான்கள் சொல்வது ஒன்றாகவும் செய்வது மற்றொன்றாகவுமே உள்ளது.

    ஆப்கன் நிவை

    ஆப்கன் நிவை

    அங்கு பல்வேறு இடங்களிலும் கடுமையான சட்டங்கள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல பெண்களுக்கு புர்கா கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. புர்கா அணியாமலும் ஆண் துணை இல்லாமலும் பெண்கள் வீடுகளை விட்டு வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் ஒரு செயலை தாலிபான்கள் செய்துள்ளனர். அதாவது ஹெராட் என்ற நகரில் 4 இளைஞர்களைக் கொன்ற தாலிபான்கள், அவர்களது உடலை கிரேனின் பின் பக்கம் தொங்கவிட்டு, நகரின் முக்கிய பகுதிகளில் அந்த கிரேன்களை நிறுத்தியுள்ளனர்.

    4 பேர் கொலை

    4 பேர் கொலை

    அவர்கள் 4 பேரும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களது உடல்களை இப்படி பொது இடங்களில் தொங்கவிடுவது மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும் என்று ஹெராட் நகரின் துணைநிலை ஆளுநர் மவ்லவி ஷிர் அகமது முஹாஜிர் தெரிவித்துள்ளார்.அந்த 4 பேரின் உடல்கள் கிரேனின் பின் பகுதியில் தொங்குவது போன்ற படங்களைத் தாலிபான்கள் இணையத்திலும் பதிவிட்டுள்ளனர். இந்த போட்டோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தாலிபான்கள் ஆட்சி

    தாலிபான்கள் ஆட்சி

    இது தொடர்பாகப் பல வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகிறது. அதில் ஒரு வீடியோவில் கொலை செய்யப்பட்டுத் தொடங்கவிடப்பட்ட நபரின் கழுத்தில் அட்டை ஒன்று தொடங்கவிடப்பட்டுள்ளது. அதில் 'கடத்தல்காரர்கள் இப்படி தான் தண்டிக்கப்படுவார்கள்' என்று எழுதப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1996-2001 காலகட்டத்திலும் தாலிபான்கள் இதேபோலவே குற்றஞ்சாட்டப்பட்டோரைக் கொலை செய்து பொது இடத்தில் தொங்கவிடுவதை வாடிக்கையாகக் கொண்டு இருந்தனர்.

    என்ன சம்பவம்

    என்ன சம்பவம்

    முந்தைய ஆட்சியில் இருந்து கொடூரங்கள் இந்த முறை இருக்காது என்று ஒரு புறம் சொல்லிவிட்டு, மறுபுறம் மீண்டும் தாலிபான்கள் அதையே செய்வது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஹெராட் நகரின் துணைநிலை ஆளுநர் மவ்லவி ஷிர் அகமது முஹாஜிர் கூறுகையில், "சனிக்கிழமை அதிகாலை ஒரு தொழிலதிபரும் அவரது மகனும் கடத்தப்பட்டதாகப் பாதுகாப்புப் படையினருக்குப் புகார் அளிக்கப்பட்டது. இதில் தாலிபான்கள் துரிதமாகச் செயல்பட்டதில், வெறும் சில மணி நேரங்களில் கடத்தப்பட்டவர்கள் மீட்கப்பட்டனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் கடத்தல்காரர்கள் 4 பேரும் கொல்லப்பட்டனர்

    சரியான தண்டனை

    சரியான தண்டனை

    இது இஸ்லாமிய நாடு. இங்கு யாரும் யாரையும் காயப்படுத்தக் கூடாது. கடத்துவது மிகப் பெரிய குற்றம். அவர்களுக்குத் தக்க தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் எங்கு இதுபோன்ற குற்றங்கள் நடைபெற்றாலும் இதேபோன்ற கடுமையான தண்டனை வழங்கப்படும் மற்றவர்கள் யாரும் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. அவர்களை எச்சரிக்கும் வகையிலே இப்படி பொது இடங்களில் சடலங்கள் தொங்க விடப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார். மேலும். இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

    English summary
    Taliban hung the bodies of four kidnappers from cranes after killing them during a shootout in Afghanistan. latest crime news in Afghanistan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X