For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்கான் உளவுத்துறை அலுவலகம் மீது தலிபான்கள் தாக்குதல்: 12 பேர் பலி

By Mathi
Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தானில் உளவுத்துறை அலுவலகம் மீது தலிபான்கள் இன்று நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் கஜினி நகரில் உள்நாட்டு உளவுத்துறையின் மாகாண அலுவலகம் அமைந்துள்ளது. இன்று அதிகாலை வெடிப் பொருட்கள் நிரப்பிய 2 லாரிகளில் வந்த பயங்கரவாதிகள், அலுவலகத்தின் வாயிலில் அவற்றை வெடிக்கச் செய்தனர்.

இதில், பணி முடிந்து தூங்கிக்கொண்டிருந்த 8 போலீஸார் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, மேலும் 13 பயங்கரவாதிகள் அலுவலகத்தின் முன்புறமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் திருப்பித் தாக்கியதில் அந்த 13 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

எரிபொருள் நிரப்பிய லாரி வெடித்ததால் ஏற்பட்ட அதிர்வில், கஜினி நகரிலுள்ள பல கட்டடங்களின் கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கியதாகவும், 80 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அம் மாகாண ஆளுநர்கவர்னர் மூஸா கான் தெரிவித்துள்ளார்.

English summary
The Taliban struck a government compound in eastern Afghanistan early on Thursday in an attack that included two suicide truck bombings and left at least 12 people dead, including eight off duty policemen asleep in their quarters nearby, officials said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X