For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேட்டருக்கு வந்த தாலிபான்கள்.. வேலை செய்யும் பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.. புது ஆர்டர்

காபூல் வேலை செய்யும் பெண்கள் வீட்டிலேயே இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

காபூல்: காபூலில் வேலை செய்யும் பெண்கள் வீட்டிலேயே இருக்கும்படி புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. மேலும் ஆண்களை மாற்றமுடியாத இடங்களில் மட்டுமே பெண்கள் வேலை செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தலிபான்கள் கடந்த கால ஆட்சியில் இருந்தபோது, மக்களிடம் கொடூரமாக நடந்து கொண்டார்கள்... தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை கொன்று குவித்தார்கள்.

வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு! வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!

ஏராளமான சட்ட திட்டங்களை உருவாக்கி அதை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் சவுக்கால் அடித்தல், கை, கால்களை வெட்டுதல், கல்லால் அடித்து கொல்லுதல் அல்லது சுட்டுக் கொல்லுதல் போன்ற கொடூர தண்டனைகளை வழங்கினார்கள்.

 எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இப்போது மறுபடியும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கடந்த காலங்களை போலவே கொடூர தண்டனைகளை வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது... மேலும் தாலிபான் பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்று சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதற்கேற்றபடியே ஆப்கன் அரசின் ஒவ்வொரு செயல்களும் அமைந்து வருகின்றன.

 பொதுமன்னிப்பு

பொதுமன்னிப்பு

அமைதியான ஆட்சியை தருவோம் என்று தாலிபான்கள் உறுதி தந்த நிலையிலும், பொதுமன்னிப்பு தரப்படும் என்று அறிவித்த பிறகும், பெண்களுக்கு அரசாங்கத்தில் பங்கு என்று அழைப்பு விடுத்த போதிலும், அதை ஆப்கானிய பெண்கள் இப்போது வரை ஏற்கவில்லை.. பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று பேட்டி தந்த அன்றே, பெண்கள் சவுக்கால் அடிக்கப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட விழுந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகி பதைபதைப்பையும் கூட்டியது.

 குழந்தைகள்

குழந்தைகள்

மீடியாவில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.. முன்னாள் பெண் நீதிபதிகளின் உயிர்களுக்கு தண்டனை பெற்ற குற்றவாளிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் உயிருக்கு பயந்து தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.. வேலைவாய்ப்பையும் தாலிபான்கள் பறித்து கொண்டுள்ளதால், குழந்தைகள் பசியால் துடிக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது.

கல்வி

கல்வி

பெண்கள் வீடுகளுக்குள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.. இத்தனை வருடங்களாக கஷ்டப்பட்டு படித்து முன்னுக்கு வந்த பெண்களின் நிலைமை மோசமாகி கொண்டே செல்கிறது.. ஆடைக்கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.. பல்கலை கழக வகுப்புகளிலும் ஆண், பெண் மாணவர்களை தனித்தனியாக பிரித்துள்ளனர்.. இப்படிப்பட்ட சூழலில்தான், காபூலில் வேலை செய்து வந்த பெண்களை வீட்டிலேயே இருக்கும்படி தாலிபான்கள் புது உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளனர்.

 உத்தரவு

உத்தரவு

அதுமட்டுமல்ல, பல்வேறு பகுதிகளில் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதே இல்லையாம்... காபூல் மேயர் ஹம்துல்லா நமோனி செய்தியாளர்களிடம் பேசியபோது, "வேலை செய்யும் பெண்கள் வீட்டிலேயே இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது... ஆண்களை மாற்றமுடியாத இடங்களில் மட்டுமே பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது... ஆனால், டிசைன் மற்றும் என்ஜினியரிங் துறைகளில் திறன் பெற்ற ஊழியர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 பொது கழிவறை

பொது கழிவறை

பெண்களுக்கான பொது கழிவறைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. அதேசமயம், உள்ளாட்சி துறைகளில் வேலை செய்யும் பெண்கள் குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை... இதுகுறித்து முடிவெடுக்கும் வரை பெண் ஊழியர்கள் சம்பளம் பெற்றுக்கொள்ளலாம். கடந்த மாதம் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றும் வரை காபூலில் அனைத்து துறைகளிலும் வேலை செய்த மொத்த ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பெண்கள் ஆவார்" என்றார்.

 தாலிபான்கள்

தாலிபான்கள்

அதாவது, கடந்த காலத்தில் பெண்கள் வீட்டுக்கு வெளியே பணிகளுக்கு செல்ல தடைவிதித்து இருந்தனர். இப்போது அதுபோன்ற தடைகள் எதுவும் இருக்காது என்றும் தலிபான்கள் கூறியிருந்தனர்.. இதைதான் தற்போது மீறிஉள்ளனர்.. பல இடங்களில் பெண்கள் பணிக்கு வருவதை தலிபான்கள் தடுத்து வருவது அதிர்ச்சியை கிளப்பி வருகிறது.. வங்கிகள் மற்றும் சில அலுவலகங்களுக்கு வந்த பெண் ஊழியர்களை திருப்பி அனுப்பிய சம்பவமும் நடந்து வருகிறது.

அச்சம்

அச்சம்

பெண்களுக்கு சம உரிமைகள் வழங்க வேண்டும் என்று சர்வதேச நாடுகள் வற்புறுத்தி வரும் நிலையில், ஆனால் அவைகளை தலிபான்கள் அதை கண்டுகொள்ளாமல் செயல்பட்டு வருவதும் உலக மக்களை கவலை கொள்ள வைத்து வருகிறது.. இனி அடுத்தடுத்த நாட்களில் பெண்களின் நிலைமை என்னாகுமோ என்ற அச்சமும் ஆப்கனில் ஏற்பட்டு வருகிறது.

English summary
Talibans: Afghan women employees working at kabul to stay at home
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X