ரெடி.. ஸ்டார்ட்.. வேலையை காட்டிய தாலிபான்கள்.. நடிக்காதீங்க.. புது உத்தரவால் கலங்கும் ஆப்கன் பெண்கள்
காபூல்: எதிர்பார்த்தபடியே பெண்கள் மீதான அடுத்தடுத்த கட்டுப்பாடுகளை தாலிபன்கள் கொண்டுவந்துவிட்டனர்.. அந்த வகையில் இப்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. இது ஆப்கன் மக்களை கலங்கடித்து வருகிறது.
மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள தாலிபான்கள், ஆப்கன் பெண்களுக்கு அவரது உரிமைகளை அளிப்போம் என்று முதல் வாக்குறுதியாகவே தந்திருந்தனர். ஆனால், அதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை.. காரணம், அமைச்சரவையில் பெண்கள் யாருமே இல்லை
அதேசமயம், தாலிபான்களின் பேச்சை இதுவரை அந்த நாட்டு பெண்கள் நம்பவுமில்லை... பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பில், உரிமைகள் எதுவும் தரப்படவில்லை.
துளிர்க்கும் நம்பிக்கை! எய்ட்ஸ் நோயில் இருந்து முற்றிலுமாக குணமடைந்த 30 வயது தாய்.. எப்படி நடந்தது?

பெண்கள்
ஆடைக் கட்டுப்பாட்டையும் கொண்டு வந்துவிட்டனர்.. பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி இல்லை.. திரைச்சீலை உதவியுடன் மாணவர்களை தனியாக பிரித்து உட்கார வைப்பதாக சொல்லி உள்ளனர்..பெண் பிள்ளைகளுக்கு ஆசிரியைகள் தான் பாடம் நடத்துவர். மகளிர் மேம்பாட்டுத்துறையில் கூட பெண்கள் வேலைபார்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.. பல்கலைக் கழகங்களில் பெண்கள் பணியாற்ற கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துள்ளனர்..

நீதிபதிகள்
ஒருகட்டத்தில் பெண் நீதிபதிகளே கலங்கி போய், உயிரை கையில் பிடித்து கொண்டு தப்பித்து செல்லும் நிலைமையும் அங்கு ஏற்பட்டது. இவர்களுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பெண்கள் கலக்கத்தில் உறைந்தனர்.. இதைதவிர, பெரும்பாலான பணிகளில் இதைதவிர, பெரும்பாலான துறைகளில் பெண்களுக்கு தடை விதிக்கப்படலாம் என்று அச்சமும் எழுந்தபடியே உள்ளது.

ஆப்கானிஸ்தான்
எதிர்பார்த்தபடியே ஒரு முக்கிய செய்தி வெளியாகி உள்ளது.. ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் டிவி நிறுவனங்களுக்கு ஒரு புதிய விதிமுறையை விதித்துள்ளனர் தாலிபான்கள்... டிவி சேனல்களுக்காகவே ஒரு உத்தரவையும் தாலிபன்கள் பிறப்பித்துள்ளனர்.. அதில், "பெண்கள் நடித்துள்ள நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது.. பெண் ஊடகவியலாளர்கள் ஹிஜாப் எனப்படும் தலை மற்றும் முகத்தினை மறைக்கும் ஆடை அணிந்தவாறு தான் செய்தி அறிக்கைகளை தர வேண்டும்..

வெளிநாட்டு கலாச்சாரம்
ஆண் நடிகர்களும் நிர்வாணமாக இருக்கும் வகையில் காட்சிகள் எடுக்கக்கூடாது... ஆண்களின் அந்தரங்க உடல் உறுப்புகளை காட்டும் காணொளி வீடியோக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது... வெளிநாட்டு கலாச்சார மதிப்புகளை போற்றும் வெளிநாட்டுப் படங்கள் ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட கூடாது.. இஸ்லாமிய கொள்கைகள் மற்றும் ஆப்கனின் மதிப்புகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன...

உத்தரவு
முகமது நபி குறித்தோ, இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரான நிகழ்ச்சிகளையோ ஒளிபரப்பக்கூடாது என்று அந்த அந்த அறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆப்கானிஸ்தானில் பெண்கள் எந்தவொரு விளையாட்டுகளிலும் கலந்துகொள்ள கூடாது என்று தடை உள்ளது.. அதேபோல எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கூடாது என்றும் உத்தரவிட்டிருந்த நிலையில், கூடுதல் கண்டிஷன்களும் இப்போது சேர்ந்துள்ளன..