For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"கண்ணீர் தேசம்".. கையில் காசில்லை.. பசிகொடுமை.. வீட்டு பொருட்களை தெருக்களில் விற்கும் ஆப்கன் மக்கள்

ஆப்கன் மத்திய வங்கியில் கோடிக்கணக்கில் பணம் குவிகிறதாம்

Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கனில் பொருளாதாரம் மோசமாகிவிட்டதால், வீட்டு பொருட்களை தெருக்களில் வந்து விற்று சாப்பிடும் நிலைமைக்கு அந்நாட்டு மக்கள் ஆளாகி உள்ளனர்.. அத்துடன், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ஏறிவிட்டதால், மக்கள் பெரும் துயரத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

Recommended Video

    Afghan People selling household items amid poverty in Kabul | OneIndia Tamil

    தலிபான்கள் ஆட்சியை தற்போது நடத்த துவங்கிவிட்டாலும், அந்த நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மோசமடைந்து கொண்டிருக்கிறது.. காரணம், பல்வேறு நாடுகள் அந்நாட்டுடனான தூதரக உறவை ஏற்கனவே முறித்து கொண்டன... பல்வேறு உலக நாடுகள் ஆப்கனை தனிமைப்படுத்தியும் விட்டன..

    இதுவே கடுமையான பொருளாதார நெருக்கடியை அங்கு ஏற்படுத்தி விட்டது.. நாட்டின் நாணய கொள்கையும் பலவீனமடைந்து வருகிறது. இதையடுத்து, தலிபான் அரசாங்கமானது, வெளிநாட்டு நிதியை மட்டுமே நம்பி இருக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது.

    ஆப்கானிஸ்தான் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் தாலிபன் வெல்வதற்கு ட்ரோன் அனுப்பியதா பாகிஸ்தான்?ஆப்கானிஸ்தான் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் தாலிபன் வெல்வதற்கு ட்ரோன் அனுப்பியதா பாகிஸ்தான்?

     அமெரிக்கா

    அமெரிக்கா

    அதாவது அமெரிக்கா 9400 கோடி டாலர்கள் ரிசர்வ்வை வங்கியிலிருந்து நிறுத்தி வைத்து விட்டது.. சர்வதேச நிதியம், உலக வங்கிகளும் ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்திவிட்டன... தலிபான்கள் சொத்துக்கள் முடக்கப்படும் என்று 39 நாடுகளை கொண்ட நிதி தடுப்பு குழுவும் எச்சரிக்கை விடுத்துவிட்டது.

    முதலீடுகள்

    முதலீடுகள்

    அதனால்தான், சீனாவிலிருந்து பெரிய முதலீடுகளையும், அமெரிக்காவிடம் இருந்து உதவிக்கரத்தையும் தலிபான்கள் நீட்டியுள்ளனர்... இப்படிப்பட்ட சூழலில்தான் நேற்று முன்தினம் ஆப்கனின் முன்னாள் அதிகாரிகளின் வீடுகளிலிருந்து, மத்திய வங்கி மிகப் பெரிய தொகையை கைப்பற்றியிருந்தது. அந்த தொகை 1,23,68,246 டாலர்கள் இருக்கும் என்கிறார்கள்.

     மத்திய வங்கி

    மத்திய வங்கி

    இந்த அதிகாரிகளின் வீட்டில் பணம் எப்படி வந்தது? எப்படி கைப்பற்றப்பட்டது? பின்னணி என்ன? என்பது பற்றி முழுமையாக தெரியவில்லை.. ஆனால், மத்திய வங்கியின் பெரிய தொகை மட்டும் இங்கு வந்திருக்கிறது... இப்படி நாளுக்கு நாள் ஆப்கனின் பொருளாதார நிலைமை மிக மோசமான நிலைமைக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், அங்குள்ள மக்களின் நிலைமையோ அதைவிட மோசமாகி கொண்டுள்ளது.

     காபூல் நகர்

    காபூல் நகர்

    அவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.. கையில் காசும் இல்லை.. இதனால், பட்டினியாலும், பணமில்லாமலும் வறுமையில் சிக்கி திணறி வருகிறார்கள்.. இப்போது நிலைமை என்னவென்றால், தலிபான்கள் காபூல் நகரைக் கைப்பற்றியபிறகு, தங்களின் சேமிப்பை வங்கியிலிருந்து எடுக்க முயன்றும் ஏராளமானோரின் முயற்சி தோல்வியில்தான் முடிந்துள்ளது.. தலிபான்களுக்கு பயந்து கொண்டு வங்கிகளை பூட்டியுள்ளனர்.. இதனால் தாங்கள் பாடுபட்ட சேமித்த பணத்தைக்கூட வங்கியிலிருந்து எடுக்க முடியாத அளவுக்கு காபூல் மக்கள் துயரத்தில் உள்ளனர்.

     விலைஉயர்வு

    விலைஉயர்வு


    அதனால், வீட்டில் உள்ள பொருட்களை தெருக்களில் கொண்டு வந்து விற்கும் அளவுக்கு படுமோசமான நிலைமைக்கு ஆளாகி உள்ளனர்.. இதுநாள் வரை தங்கள் வீடுகளில் பயன்படுத்திய பொருட்களை, தெருவில் கொண்டு வந்து போட்டு விற்க ஆரம்பித்துள்ளனர்.. அந்த காசை வைத்து தங்கள் குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்கி தருகிறார்கள். இதைவிட கொடுமை, பொருளாதாரம் மோசமாகிவிட்டதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையை கூட ஏற்றிவிட்டார்களாம்.. இதனால் பொருட்களை விற்ற பணத்தில்கூட, அத்தியாவசிய பொருளை வாங்க முடியாத நிலைமை அம்மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது.

    சாப்பாடு

    சாப்பாடு

    சாமன்-இ-ஹசோர் பார்க் என்ற இடத்தில் அந்த பகுதி மக்கள் திரண்டு தெருக்களில் பொருட்களை விரித்து வைத்து விற்று வருகிறார்கள்.. அந்த பொருட்களில் தரையில் விரிக்கும் கார்பெட்டுகள், ஃபிரிட்ஜ், டிவி, என குவிந்து கிடக்கின்றன.. எல்லாமே விலை உயர்ந்த பொருட்கள் என்றாலும், வந்த விலைக்கு லாபம் என்று குறைந்த விலைக்கு அவைகளை விற்றும், சாப்பாடு வாங்கி சாப்பிட்டும் வருகிறார்கள்..

     பெரும் துயரம்

    பெரும் துயரம்

    இப்படி வீட்டு பொருட்களை விற்று கொண்டிருந்த ஒருவர் சொல்லும்போது, "என் வீட்டு பொருட்களையும் பாதி விலைக்கு விற்றுவிட்டேன்.. 25 ஆயிரம் ரூபாய்க்கு பிரிட்ஜ் வாங்கினேன்.. ஆனால் 5 ஆயிரம் ரூபாய்க்குதான் விற்றேன்.. நான் என்ன செய்யறது? என் குழந்தைகள் பசியால் அழுகிறார்களே?" என்று கண்ணீர் மல்க கூறினார். இப்படி ஒரு பக்கம் உயிருக்கு பயந்து தப்பித்து சென்றும், மறுபக்கம் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தெருக்களில் பொருட்களை விற்றுக் கொண்டும், தாலிபன் மக்களின் நிலைமை பெரும் துயரத்தை ஏற்படுத்தி வருகிறது.

    English summary
    Talibans: People sell household items alongside kabul streets amid worsening economic situation
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X