For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்.. ஆனால் ஒன்று.. போகாத ஊருக்கு வழி தேடும் இம்ரான்

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: இம்ரான் கான்

    இஸ்லாமாபாத்: காஷ்மீரை இரண்டாக பிரித்த நடவடிக்கையை இந்தியா திரும்ப பெற்றால் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

    காஷ்மீரில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பு அந்தஸ்து இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி மத்திய அரசு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் 370 சட்டப்பிரிவை நீக்கி அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

    அது போல் ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற யூனியன் பிரதேசங்களாகவும் மாற்றப்பட்டது.

     3 நாட்கள் தொடர் விடுமுறை.. கூட்ட நெரிசலால் சிக்கி தவித்த சென்னை கோயம்பேடு 3 நாட்கள் தொடர் விடுமுறை.. கூட்ட நெரிசலால் சிக்கி தவித்த சென்னை கோயம்பேடு

    இந்தியா நடவடிக்கை

    இந்தியா நடவடிக்கை

    இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதிகள் கைவிட்டு போகும் அபாயம் உள்ளதாக பாகிஸ்தான் கருதுகிறது. இதனால் இந்தியாவின் நடவடிக்கைக்கு அதிரடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    இதையடுத்து பாகிஸ்தான், உலக நாடுகளை சந்தித்து ஆதரவு திரட்ட முடிவு செய்தது. எனினும் ஏமாற்றமே விஞ்சியது. சீனாவை தவிர்த்து எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தருவதாக இல்லை.

    தீவிரவாதம்

    தீவிரவாதம்

    காஷ்மீர் குறித்து இந்தியாவின் நடவடிக்கையை இந்த உலகம் தடுக்க தவறினால் இந்தியாவுடன் போர் தொடுக்கவும் தயார் என இம்ரான் கான் தெரிவித்திருந்தார். ஆனால் இந்தியாவோ தீவிரவாதத்தை ஒதுக்கிவைத்து விட்டு பாகிஸ்தான் வந்தால் பேச்சுவார்த்தை நடத்த தயார் என கூறிவிட்டது.

    பேச்சுவார்த்தைக்கு தயார்

    பேச்சுவார்த்தைக்கு தயார்

    இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறுகையில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். ஆனால் காஷ்மீர் குறித்த நடவடிக்கைகள் அனைத்தையும் இந்தியா திரும்ப பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தையை தொடங்குவோம். அது போல் ராணுவம், ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றையும் இந்தியா திரும்ப பெற வேண்டும் என இம்ரான் கான் தெரிவித்துவிட்டார்.

    English summary
    Pakistan PM Imran Khan says that dialogue can start only when India reverses its illegal annexation of Kashmir, ends the curfew and lockdown, and withdraws its troops to the barracks.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X