For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக தொடர் போராட்டங்கள்

By Mathi
Google Oneindia Tamil News

Tamils protests against CHOGM
லண்டன்: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக இங்கிலாந்து மற்றும் இந்திய நகரங்களில் இன்றும் நாளையும் தொடர் போராட்டங்கள் நடைபெற உள்ளன.

தமிழினப் படுகொலையை நிகழ்த்திய இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்பது தமிழர்களின் கோரிக்கை. இக்கோரிக்கையை வலியுறுத்தி இன்றும் நாளையும் இங்கிலாந்து மற்றும் இந்திய நகரங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற உள்ளன.

இங்கிலாந்தின் லண்டன் நகரில் டவுனிங் வீதியில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 7 மணி வரை போராட்டம் நடைபெற இருக்கிறது.

இந்தியாவில் சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதேபோல் பெங்களூர் டவுன் ஹால் அருகே வெள்ளிக்கிழமையன்று மாலை 4.30 முதல் 6.30 மணி வரை போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் பங்கேற்போர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9448394365.

அத்துடன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று மாநில தலைமை செயலகம் எதிரேயும் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்துவதற்கும் இதில் இந்தியா பங்கேற்கவும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

English summary
The Commonwealth Heads of Government Meeting will start on 15 November in Sri Lanka. Activists and Tamils across many countries are registering their anger and taking part in protests. Here are some details of protests which taking place on 14 and 15 November.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X