For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீல நிற ராட்சச கல்.. 15 கிலோ.. ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன இளைஞர்.. உலகை திரும்பி பார்க்க வைத்த சம்பவம்

Google Oneindia Tamil News

தான்சேனியா: ஒரு ராட்சச நீல நிற கல் காரணமாக இளைஞர் ஒருவர் ஒரே இரவில் கோடீஸ்வரராகி உள்ளார். இந்த செய்தி உலகம் முழுக்க பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

தான்சேனியா உலகில் இருக்கும் ஏழ்மையான நாடுகளில் ஒன்று. அங்கு இருக்கும் சுரங்கங்களில் மரகத கற்கள் தொடங்கி தங்கம் வரை நிறைய கையிருப்பு உள்ளது.

ஆனால் இந்த மரகத கற்கள், டைமண்ட், தங்கம் எல்லாம் அங்கே அதிகம் கடத்தப்படுகிறது. இதனால் அந்த நாட்டின் வளமும் அதிகமாக சுரண்டப்படுகிறது.

பூட்டான் உட்பட பிற நாட்டின் ஒரு அங்குலத்தை கூட ஆக்கிரமிக்க இந்தியா முயற்சிக்கவில்லை: நிதின் கட்காரி பூட்டான் உட்பட பிற நாட்டின் ஒரு அங்குலத்தை கூட ஆக்கிரமிக்க இந்தியா முயற்சிக்கவில்லை: நிதின் கட்காரி

என்ன அறிவிப்பு

என்ன அறிவிப்பு

இந்த கடத்தலை தடுப்பதற்காக அந்த நாட்டில் சுரங்கங்களை சுற்றி பெரிய அளவில் சுவர்கள் எழுப்பப்பட்டு உள்ளது. அதோடு அங்கு 2018ல் இருந்து தனியார் சுரங்கம் ஆரம்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பலரும் தங்கள் வீட்டின் பின்புறத்திலேயே சுரங்கங்களை அமைத்து குழிகளை தோண்டி வருகிறார்கள். இதில் அவ்வப்போது தங்கம், டைமண்ட் கிடைக்கும்.

அரசுக்கு விற்பனை

அரசுக்கு விற்பனை

இப்படி தங்கள் வீட்டு கொல்லையில் உள்ள சுரங்கங்களில் கிடைக்கும் பொருட்களை இவர்கள் அரசிடம் விற்று அதற்கு சன்மானம் பெறுவதும் வழக்கம். இப்படித்தான் ஒருவர் தான்சேனியாவில் ஒரே நாள் இரவில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். அதன்படி தான்சேனியாவை சேர்ந்த சன்னியூ லைசார் தன்னுடைய கொல்லையில் பெரிய சுரங்கம் ஒன்றை தோண்டி அங்கு தங்கம், டைமண்ட் தேடி வருகிறார்.

 என்ன கிடைத்தது

என்ன கிடைத்தது

இந்த நிலையில் நேற்று முதல் நாள் இரவு அந்த இளைஞர் லைஸாருக்கு இரண்டு மரகத கற்கள் கிடைத்துள்ளது. கரு நீல நிறத்தில் இரண்டு கற்கள் கிடைத்துள்ளது. இதில் ஒரு கல் 10 கிலோவும், இன்னொரு கல் 5 கிலோவும் இருந்துள்ளது. தான்சேனியாவில் கிடைத்த மிகப்பெரிய மரகத கல் இதுதான் என்கிறார்கள். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 25 கோடி ரூபாய் ஆகும்.

கிடைத்தது

கிடைத்தது

இந்த நிலையில் நேற்று தான்சேனியா அரசு இந்த மரகத கல்லை லைஸாரிடம் இருந்து பெற்றுக்கொண்டது. அவருக்கு 25 கோடி ரூபாயை அந்நாட்டு அரசு நேற்று வழங்கியது. இதன் மூலம் ஒரே நாள் இரவில் இரண்டு கற்கள் மூலம் லைசார் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். அவருக்கு அந்நாட்டை சேர்ந்த அரசியல் தலைவர்கள் போன் செய்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

English summary
Tanzania miner becomes a billionaire in a single night due to a stone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X