For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாடா மோட்டார்ஸ் எம்.டி. தற்கொலை: 3 பக்க கடிதம் சிக்கியது

By Siva
Google Oneindia Tamil News

Tata Motors MD Karl Slym left 'suicide note': Thai police
பாங்காக்: டாடா மோட்டார்ஸ் நிறுவன எம்.டி. கார்ல் ஸ்லிம் தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடும் என்று தாய்லாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது அறையில் அவர் கையால் எழுதிய 3 பக்க கடிதம் கிடைத்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவன எம்.டி. கார்ல் ஸ்லிம் தாய்லாந்தில் நடந்த நிறுவன கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள அங்கு சென்றவர் பாங்காக்கில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் தனது மனைவி சாலியுடன் கடந்த 24ம் தேதி தங்கியுள்ளார். இந்நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 22வது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்லிம்மின் அறையில் அவர் எழுதிய 3 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. இதன் மூலம் அவர் மரணம் தற்கொலை என்று போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ஸ்லிம்முக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த சனிக்கிழமை இரவு 7 மணிமுதல் தொடர்ந்து 5 மணிநேரம் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் குடும்ப பிரச்சனை குறித்து சத்தமாக சண்டை போட்டுள்ளனர். இதையடுத்து சாலி தனது கணவருடன் பேச விரும்பால் கடிதம் ஒன்றை எழுதி அவரிடம் கொடுத்துவிட்டு தூங்கி விட்டார்.

இதையடுத்து ஸ்லிம் தனது அறையில் இருந்த சிறிய ஜன்னலை திறந்து அதன் வழியாக கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தங்கியிருந்த அறையில் பால்கனி கிடையாது. மேலும் அங்கு இருந்த பெரிய ஜன்னலை திறக்க முடியாது. சிறிய ஜன்னல் வழியாக அவர் தவறி விழ வாய்ப்பே இல்லை. அதனால் அவராக ஏறி குதித்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.

அவர் சாகும் முன்பு ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்தை தாய்லாந்து போலீசார் தாய் மொழியில் மொழிபெயர்த்துள்ளனர்.

English summary
Karl Slym, managing director of Tata Motors, who died on Sunday under mysterious circumstances, may have committed suicide, Thai police indicated on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X