For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரிட்டன் ஸ்டீல் ஆலையை மூட டாடா திடீர் முடிவு- 15,000 பேர் வேலை இழப்பு... கேமரூன் அவசர ஆலோசனை

By Mathi
Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டன் ஸ்டீல் ஆலையை மூடப் போவதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது தொழில்துறை வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பால் சுமார் 20,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் கேமரூன் இன்று அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளார்.

மும்பையை தலைமையிடமாக கொண்ட டாடா நிறுவனம், 2007-ம் ஆண்டு பிரிட்டனில் உள்ள ஆங்கிலோ-டச்சு நிறுவமான கோரஸ் ஸ்டீல் ஆலையை சுமார் ரூ53,460 கோடிக்கு விலைக்கு வாங்கியது. அதன் பின்னர் இந்நிறுவனத்தின் பெயர் டாடா ஸ்டீல் யூரோப் என மாற்றப்பட்டது.

Tata Steel moves to exit UK

கோரஸ் நிறுவனம் உலகின் 5-வது முன்னணி ஸ்டீல் நிறுவனமாகும். இந்திய நிறுவனம் ஒன்று வெளிநாட்டு நிறுவனத்தை மிகப் பெரிய தொகைக்கு வாங்கியது அதுவே முதல்முறையுமாகும்.

தற்போது 10 ஆண்டுகள் கடந்த நிலையில் பிரிட்டன் ஸ்டீல் ஆலையை தொடர்ந்து நடத்த முடியாது என்ற முடிவுக்கு டாடா நிறுவனம் வந்துள்ளது. மோசமான நிதி நிலை காரணமாகவே டாடா ஸ்டீல் நிறுவனத்தை பகுதியாகவோ, முழுமையாகவோ விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய சந்தையில் 2-வது மிகப் பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமாக இந்நிறுவனம் இருக்கிறது. டாடா குழுமத்தின் இம்முடிவு பிரிட்டன் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அந்நிறுவனத்தில் பணிபுரிந்த சுமார் 15,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அந்நாட்டு அரசு பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொள்ள இருக்கிறது.

மேலும் டாடா நிறுவனத்தின் இம்முடிவால் வேல்ஸின் தால்போட் துறைமுகமும் மிகக் கடுமையான பொருளாதார இழப்பை சந்திக்கும். அங்கு பணிபுரியும் 4,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகி இருக்கிறது. அந்த துறைமுகத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையே 5,500.

இதனைத் தொடர்ந்து இது குறித்து இன்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இதனிடையே இதுபோன்ற நிலைமைகள் எதிர்காலத்தில் உருவாகாமல் இருக்க பிரிட்டன் அரசு ஸ்டீல் ஆலைகளை தேசியமயமாக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

English summary
With thousands of jobs at risk following Tata Steel's move to sell its UK business, British Prime Minister David Cameron is likely to hold an emergency meeting on Thursday to discuss the matter as his government faces pressure over the economy ahead of the EU referendum.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X