For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகை மிரட்டும் ஜிக்கா வைரசால் பாதிக்கப்பட்ட டாடா நிறுவனத்தின் புதிய கார்

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: தென் அமெரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் ஜிக்கா வைரஸ் தற்போது உலகை மிரட்டி வருகிறது. இதனிடையே ஜிக்கா வைரஸ் டாடா நிறுவனத்தின் புதிய காரையும் விட்டு வைக்கவில்லை. ஆமாம் டாடா நிறுவனத்தின் புதிய சிறிய ரக கார் ஒன்றுக்கு ஜிக்கா என்று பெயரிப்பட்டு உள்ளது.

தென் அமெரிக்கா நாடுகளான பிரசில், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் ஜிக்கா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு தென் அமெரிக்காவில் மட்டும் 4 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடபட்டுள்ளது. ஜிக்கா வைரஸ் டெங்கு, சிக்குன்குனியா நோய்களை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் மூலம் பரவுகிறது.

Tata Zica affected by the Zika virus?

ஜிக்கா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் கண்கள் சிவப்பாகுதல், காய்ச்சல், அரிப்பு, தசை மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுவரை இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் முறையான சிகிச்சை அளிக்க முடியவில்லை. ஜிக்கா வைரஸ் பல நாடுகளிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு, உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையை அறிவித்துள்ளது.

உலக மக்கள் ஜிக்கா வைரசால் பாதிக்கப்பட்டு விடுவமோ என்று பயந்துக்கொண்டு இருக்கும் போது இந்தியாவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டாடா ஜிக்கா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆமாம் டாடா நிறுவனத்தின் புதிய சிறிய ரக கார் ஒன்றுக்கு ஜிக்கா என்று பெயரிப்பட்டு, கடந்த இரண்டு வாரமாக உலக புகழ் பெற்று கால்பந்து வீரர் மெஸ்சியை வைத்து விளம்பரம் செய்துவருகிறது.

இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்னதாக ஜிக்கா வைரசின் தாக்கம் பற்றி வெளிவுலகிற்கு அதிகமாக தெரிவந்தது. ஒரு வாரத்திற்குள்ளாக ஜிக்கா வைரஸ் மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதானால் டாடா நிறுவனம் குழம்பி போய் உள்ளது.

தொடர்ந்து ஜிக்கா என்ற பெயரை தொடர்வது அந்த காரின் விற்பனையை பாதிக்குமா என்பது பற்றி டாடா நிறுவனம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் அந்த நிறுவனம் காரின் பெயரை மாற்ற கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
India’s Tata Motors Ltd.considers renaming new Zica car as Zika virus spreads into the news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X