For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அங்க என்னம்மா சத்தம்... 13 பில்லியன் வருடம் பழமையான ஸ்டாரிலிருந்து வந்த "இசை"!

Google Oneindia Tamil News

லண்டன்: நமது "மில்க்கி வே கேலக்ஸியிலேயே மிக மிக பழைய நட்சத்திரங்களிலிருந்து "இசை"ச் சத்தம் கேட்பதை இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கிட்டத்தட்ட 13 பில்லியன் வருடம் பழமையான நட்சத்திரம் ஒன்றிலிருந்துதான் இந்த சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. நாசாவின் கெப்ளர் தொலைநோக்கியின் தகவல்களை வைத்து இந்த சத்தத்தை ஆராய்ந்து வருகின்றனர் இங்கிலாந்து ஆய்வாளர்கள்.

Team detects 'music' from 13 bn-year-old stars

இது ஒரு இசை வடிவம் போல இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் இந்த நட்சத்திரத்தின் வயது உள்ளிட்டவை குறித்து அறிய முடியுமா என்றும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த ஒலி வடிவத்தை வைத்து இந்த நட்சத்திரங்களின் இயல்பு, நிறை, வயது உள்ளிட்டவற்றை அறிய முடியுமா என்பதுதான் இப்போது ஆய்வாளர்களின் ஒரே கேள்வியாக உள்ளது. இந்த இசை வடிவத்தைக் கேட்டறிந்தது பிர்மிங்காம் பல்கலைக்கழக ஆய்வுக் குழுவாகும்.

ஆஸ்டிரோசீஸ்மாலஜி (asteroseismology) முறைப்படி இந்த சத்தத்தை இங்கிலாந்து ஆய்வுக் குழு பதிவு செய்துள்ளது. இது சாதாரண சத்தம் போல இல்லாமல் ஒரு வகையான இசை வடிவம் போல இருப்பதாக ஆய்வுக் குழு கூறுகிறது.

English summary
Researchers in England have detected acoustic oscillations of one of the oldest known clusters of stars in the Milky Way Galaxy, around 13 billion years old.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X