For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரிதாகிறது கூகுள், அமேசான் மோதல்.. இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வர மாட்டேன்

அமேசான் மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை தற்போது பெரிதாகி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமேசான் மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு இடையில் கடந்த சில மாதங்களாக சில பிரச்சனைகள் நிலவி வருகிறது. தற்போது இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதன் காரணமாக இரண்டு நிறுவன பொருட்களையும் பயன்படுத்தும் பொதுமக்கள் அதிக அளவில் பாதிப்படைவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பிரச்சனை டெக் உலகில் இன்னும் சில காலத்தில் நிறைய பாதிப்புகளை உருவாக்கும் என்றும் கூறுகிறார்கள்.

இந்த பிரச்சனையில் தற்போது ஆப்பிள் நிறுவனம் தலையிட்டு இருப்பதும் டெக் உலகில் மிகவும் ஹை லைட்டான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இனி யூடியூப் கிடையாது

இனி யூடியூப் கிடையாது

அமேசான் நிறுவனம் புதிதாக ''அமேசான் எக்கோ ஷோ'' என்ற சிறிய கணினி வடிவிலான எலக்ட்ரானிக் உபகரணம் ஒன்றை வெளியிட இருக்கிறது. இந்த உபகாரணத்தில் டிவி பார்ப்பதை போலவே வீடியோக்கள் பார்க்க முடியும். இது குறித்த அறிவிப்பு வெளியாகிய சில நாட்களிலேயே வைரல் ஆனது. இந்த நிலையில் இந்த உபகரணத்தில் யூடியூப் வராது என கூகுள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதனால் இதை வாங்குவதற்காக காத்திருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

காரணம் என்ன

காரணம் என்ன

இந்த பிரச்சனைக்கு பின் கூகுள் அமேசான் இடையே நிலவும் சண்டை காரணமாக சொல்லப்பட்டுள்ளது. அதன்படி கூகுளின் பொருட்கள் எதுவும் அமேசான் தளத்தில் கிடைப்பது இல்லை. அதேபோல் கூகுளின் சாப்ட்வேர்களையும் அமேசான் உபகரணங்கள் வழியாக பயன்படுத்த முடிவதில்லை. இதை காரணம் காட்டி தனது யூடியூப் சேவையை கூகுள், அமேசான் எக்கோவில் இருந்து நிறுத்த முடிவெடுத்துள்ளது. மேலும் அமேசானுக்கு எதிராக இன்னும் நிறைய நடவடிக்கைகளை எடுக்கவும் முடிவு செய்து இருக்கிறது.

சமரசம் செய்யலாம்

சமரசம் செய்யலாம்

இந்த நிலையில் இதுவரை வீராப்பு காட்டிக் கொண்டு இருந்த அமேசான் நிறுவனம் தற்போது கொஞ்சம் இறங்கி வந்துள்ளது. இதுகுறித்து சமாதானம் பேச நினைக்கிறோம் என்று கூறியுள்ளது. ஆனால் அதே சமயத்தில் ''அமேசான் எக்கோவில் யூடியூப் இல்லை என்றால் பரவாயில்லை, அதில் வரும் 'வெப் வர்ஷன்' மூலம் மக்கள் யூடியூப் பயன்படுத்திக் கொள்வார்கள்'' என்று பேசியிருக்கிறது. இதன் காரணமாக உண்மையிலேயே அமேசான் சமாதானம் பேச வருகிறதா இல்லை சண்டை போட வருகிறதா என தெரியாமல் கூகுள் குழம்பிப் போய் இருக்கிறது.

மூக்கை நுழைத்த ஆப்பிள்

மூக்கை நுழைத்த ஆப்பிள்

தற்போது ஆப்பிள் நிறுவனம் அமேசானுடன் கைகோர்த்துள்ளது. அதன்படி ஆப்பிள் டிவியில் இனி அமேசான் பிரைம் வீடியோக்களை பார்க்க முடியும் என்று கூறியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு அமேசானுக்கும், ஆப்பிளுக்கும் இடையில் முட்டலும் மோதலுமாக இருந்தது. தற்போது கூகுளுடன் அமேசான் போட்ட சண்டை காரணமாக ஆப்பிள் அமேசானிடம் ஜோடி சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Tech giants Amazon and Google are fighting with each other. Google says that it would pull its YouTube apps from Amazon's Echo Show.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X