For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹெச் 1 விசாவில் சின்ன குளறுபடி… இதுக்கும் ட்ரம்புக்கும் சம்மந்தம் இல்லீங்கோ!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): ஹெச்1 பி விசா அனுமதி வழங்குவதில் தொழில்நுட்பக் கோளாறினால் சின்ன குளறுபடி நடந்துள்ளது. அதை உடனுக்குடன் சரி செய்யவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

ஹெ1 பி விசாவுக்கு ஆண்டு தோறும் 65 ஆயிரம் பொது விண்ணப்பங்கள் அனுமதிக்கப் படுகின்றன. அதில் உள் ஒதுக்கீடாக 6800 விசாக்கள் சிலி மற்றும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது.

Technical error in issuing H1B visa applications

சிலி மற்றும் சிங்கப்பூர் நாடுகளுடன் அமெரிக்கா செய்து கொண்ட வர்த்தக உடன்படிக்கையின் அடிப்படையில் இது அமல்படுத்தப்படுகிறது.

இந்த சிறப்பு ஹெச்1பி விசாக்கள் ஹெச்1பி1 (H1B1) என்ற குறியீட்டுடன் வழங்கப்படும். தற்போது ஹெச்1பி பொது விசா விண்ணப்பித்தவர்களுக்கு தவறுதலாக ஹெச்1பி1 (H1B1) என்ற குறியீட்டுடன் ஒப்புதல் கடிதம் (படிவம் I 797) அனுப்பி உள்ளார்கள்.

தொழில் நுட்பக் கோறாறு காரணமாக இந்த தவறு நடைபெற்றுள்ளதாம். அது குறித்து அமெரிக்க குடியுரிமை சேவை மையம் (USCIS) அமெரிக்க குடியுரிமை வழங்கறிஞர்கள் சங்கத்திற்கு (AILA) ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்கள்.

அதில் கலிஃபோர்னியா சேவை மையத்திலிருந்து தவறுதலாக அனுப்பபட்ட I 797 படிவம் சரி செய்யப்பட்டு H1B என்ற சரியான குறியீட்டுடன் மீண்டும் அனுப்பப் படுவதாக கூறப்பட்டுள்ளதாம். வெர்மாண்ட் மற்றும் நெப்ராஸ்கா சேவை மையங்களிலும் இதே போல் திருத்தம் செய்து அனுப்பப்படுமா என்று AILA சார்பில் கேட்கப்பட்டுள்ளது.

இது குறித்து நியூயார்க் நகரில் பணியாற்றி வரும் பிரபல குடியுரிமை வழக்கறிஞர் கவிதா ராமசாமியை ஒன் இந்தியா சார்பில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம்.

தொழில் நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு I 797 படிவம் சரியான H1B என்ற குறியிட்டுடன் அனுப்பப் பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்களுக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்குள் திருத்தப்பட்ட விசா அனுமதிப் படிவம் வந்து சேரும் என்று கவிதா ராமசாமி கூறினார்.

மேலும் விண்ணப்பதாரர்கள் குழப்பம் அடையவோ கவலை கொள்ளவோ தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

ஹெச்1 விசா என்றாலே நம்மவர்களும் ஊடகங்களும் டென்ஷன் ஆகி ட்ரம்ப் மீது பழியையும் போட்டு, தேவை இல்லாத குழப்பங்கள் ஏற்பட்டு வருவதால், குடியுரிமை வழக்கறிஞரின் விளக்கத்தோடு இந்த தகவலை தெரியப்படுத்துகிறோம்..

-இர தினகர்

English summary
USCIS has wrongly issued H1B1 visas for H1B visa applicants due to technical error. It has been rectified and revised I 797 forms are sent with correct H1B visa category. H1B1 visas are issued to Chile and Singapore citizens as per free trade agreement US has signed with these countries. Also this special category visas are issued out of total 65000 general annual quota for H1B petitions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X