For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசியா தைப்பூச திருவிழாவில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள் - பிரமிக்க வைத்த முப்பரிமாண ரதம்

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: கொரோனா வைரஸ் அச்சத்தையும் மீறி மலேசியா தைப்பூச திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

மலேசியாவில் அரசு ஆதரவுடன் தைப்பூச திருவிழா 3 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இதற்கான ஏற்பாடுகளை மலேசியா அரசு செய்திருந்தது. தமிழர்கள் வாழும் பினாங்கு உள்ளிட்ட இடங்களிலும் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது.

Ten of Thousands of devotees throng Malaysia Batu Caves for Thaipusam

நடப்பாண்டில் கொரானோ வைரஸ் அச்சுறுத்தலால் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மலேசியாவில் ஏற்கனவே கொரோனா வைரஸால் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

Ten of Thousands of devotees throng Malaysia Batu Caves for Thaipusam

இந்நிலையில் வழக்கம் போல லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் அலகு குத்தியும் தைப்பூச திருநாளில் நேர்த்திக் கடன்களை செலுத்தினர். உலகப் புகழ் பெற்ற பத்துமலையில் அமைந்துள்ள ஶ்ரீசுப்பிரமணியர் சுவாமி கோலிலிலும் வழக்கம் போல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

Ten of Thousands of devotees throng Malaysia Batu Caves for Thaipusam

நடப்பாண்டு தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலை முருகன் கோவில் சார்பாக முப்பரிமாண ரதம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இந்த ரதத்தை பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர்.

English summary
Tens of thousands of devotees thronged Batu Caves Murugan Temple in Malaysia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X