For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்ணிமைக்கும் நேரத்தில்.. ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் துப்பாக்கி சூடு.. பலர் பலி: டென்மார்க்கில் பயங்கரம்

கோபன்ஹேகன் ‌ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள்

Google Oneindia Tamil News

டென்மார்க்: கோபன்ஹேகன் பகுதியில் அமைந்துள்ள ‌ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஒன்றில் திடீரென துப்பாக்கி சூடு நடந்துள்ளது.. இதில், பலர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன்.. இங்கு ஃபீல்ட்ஸ் என்ற பிரபலமான ஷாப்பிங் சென்டர் இயங்கி வருகிறது.. நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை லீவு என்பதால், ஏராளமானோர் இங்கு குவிந்திருந்தனர்.

அப்போது, திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.. இதில் அங்கிருந்த பொதுமக்கள் பலரும் சுருண்டு சுருண்டு விழுந்தனர்.. என்ன நடக்கிறது என்பது தெரியாமல் பலர் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.

 அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையை.. கட்டுப்படுத்தும் மகத்தான மசோதா! சாதித்த பைடன் அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையை.. கட்டுப்படுத்தும் மகத்தான மசோதா! சாதித்த பைடன்

சடலங்கள்

சடலங்கள்

அதற்குள் பாதுகாப்பு போலீசாரும் அங்கே குவிந்தனர்.. 3 பேர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து உயிரிழந்திருந்தனர்.. பலர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.. இதையடுத்து, 22 வயதான டேனிஷ் என்ற இளைஞரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.. உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றியதுடன், படுகாயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இதில் 3 பேரின் நிலைமை சீரியஸாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

 கண்ணிமைக்கும் நேரத்தில்

கண்ணிமைக்கும் நேரத்தில்

கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது.. இந்த சம்பவம் குறித்து டென்மார்க் போலீசார் சொல்லும்போது, டேனிஷ் என்ற இளைஞர் கைதாகி உள்ளார், இது "பயங்கரவாதச் செயல்" என்பதை நிராகரிக்க முடியாது என்று தெரிவித்தனர்... துப்பாக்கிச் சூடு பற்றிய தகவல்களுக்கு பிறகு அதிகாரிகள் நகரத்தில் உள்ள ஃபீல்ட் மாலுக்கு அனுப்பப்பட்டதாக கோபன்ஹேகன் போலீசார் தெரிவித்தனர்.. மேலும் அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் இருக்கும் மக்களை, தங்கி உதவிக்காக காத்திருக்குமாறும் அறிவுறுத்தினர்.

 ஷாப்பிங் மால்

ஷாப்பிங் மால்

இந்த ஒரு இடம் தவிர வேறு எங்கும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை என்கிறார்கள் போலீசார்.. இந்த துப்பாக்கி சூடு பற்றிய தகவல் அறிந்ததும், மீடியாக்கள் சம்பவ இடத்தில் குவிந்தன.. இதையடுத்து, அதிக ஆயுதம் ஏந்திய போலீஸ் அதிகாரிகளையும், அந்த மாலில் இருந்து மக்கள் வெளியே ஓடுவதையும் வீடியோவாகவும், போட்டோக்களாகவும் வெளியிட்டுள்ளன.. குழந்தையை சுமந்தபடி, அந்த மாலில் இருந்து முகம் நிறைய பயத்துடன் ஒரு பெண் வெளியேறுவது போலவும், ஆம்புலன்ஸில் ஒரு ஸ்ட்ரெச்சரில் ஒருவரை, மீட்புப் பணியாளர்கள் கொண்டு செல்லப்படும் போட்டோவும் இடம்பெற்றுள்ளது.

 கோபன்ஹேகன்

கோபன்ஹேகன்

மேலும், ஆயுதம் ஏந்தி நிற்கும் போலீசார் போன்ற படங்களும் வெளியாகி உள்ளன. இப்போதைக்கு சம்பவ இடத்தில் போலீசார் அதிக அளவு குவிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது... இருந்தாலும் இந்த துப்பாக்கி சூட்டிற்கு பிரதான காரணம் என்ன என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை.. அதேசமயம், எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் அல்லது இறந்துள்ளனர் என்பது குறித்தும் உறுதியாக தகவல் தெரியவில்லை என்கிறார் கோபன்ஹேகன் மேயர் சோபி ஆண்டர்சன்..

English summary
terrible incident in denmark and copenhagen shooting several wounded, police report கோபன்ஹேகன் ‌ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X