For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நைஜீரியாவின் வடகிழக்கை 'தனிநாடாக' அறிவித்தது போகோ ஹாரம் இயக்கம்!!

By Mathi
Google Oneindia Tamil News

க்வோஸா: நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியை தனிநாடாக போகோ ஹாரம் தீவிரவாத இயக்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

நைஜிரீயாவில் போகோ ஹாரம் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் அங்குள்ள பல கிராமங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி வந்தனர். கடந்த 2 மாதங்களாக வடகிழக்கு பகுதியில் உள்ள நகரங்களையும் கிராமங்களையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர் போகோ ஹாரம் கிளர்ச்சியாளர்கள்.

Terror Leader’s Chilling Claim About ‘Islamic Caliphate’ in Nigeria

இந்த நிலையில் க்வோஸா என்ற முக்கிய நகரம் ஒன்றையும் போகோ ஹாரம் இயக்கத்தினர் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து தங்கள் வசம் உள்ள பகுதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து தனி இஸ்லாமிய நாடாக (கலிபாத்) போகோ ஹாரம் இயக்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

இது குறித்த வீடியோ பதிவு ஒன்றை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் போகோ ஹாரம் கிளர்ச்சி அமைப்பின் தலைவர் அபு பக்கர் ஷேக், க்வோஸா நகரை வென்று தந்த அல்லாஹ்வுக்கு நன்றி. க்வோஸா தொடர்பாக நைஜீரியா இனி கவலையடைய தேவையில்லை" என்று கூறியுள்ளார்.

ஆனால் போகோ ஹாரம் இயக்கத்தின் இந்த தனிநாட்டுப் பிரகடனத்தை நைஜீரிய அரசு நிராகரித்துள்ளது. ஏற்கெனவே ஈராக் மற்றும் சிரியாவில் சன்னி முஸ்லிம்களின் அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்து 'இஸ்லாமிய தேசம்' என்ற நாட்டை பிரகடனப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

English summary
With the Islamic State's brutality and its staking of an Islamic caliphate in areas of Iraq and Syria dominating headlines, another militant group is claiming that it, too, has placed a town in Nigeria under a caliphate. Boko Haram leader Abubakar Shekau made the land claim in a newly released video, pledging to continue killing and pillaging in the name of Allah.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X