For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கராச்சியில் பங்கு சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்- தற்கொலை படையினர் உட்பட 10 பேர் பலி

Google Oneindia Tamil News

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் பங்கு சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பயங்கரவாதிகள் உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

கராச்சி நகரில் பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகம் இயங்கி வருகிறது. இதே கட்டிடத்தில் வங்கி உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.

Terrorists attack Karachi stock exchange building in Pakistan

இன்று காலை காரில் வந்த பயங்கரவாதிகள் 4 பேர் திடீரென பங்கு சந்தை அலுவலகத்தை இலக்கு வைத்து துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். மேலும் கையெறி குண்டுகளையும் சரமாரியாக வீசினர். இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்.

இத்தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேருமே சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், கையெறிகுண்டுகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு

இதனிடையே இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்திருக்கிறது. சுட்டுக் கொல்லப்பட்ட 4 பயங்கரவாதிகளும் இந்த அமைப்பின் தற்கொலை படை தீவிரவாதிகள் எனவும் தெரியவந்துள்ளது.

English summary
Seven people have been killed in an attack on the Pakistan Stock Exchange building in Karachi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X