For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊருக்கு ஒரு வாக்கு பெட்டிதான்.. கவர்னர் சொன்னது கரெக்ட்.. அமெரிக்க கோர்ட் உத்தரவு

டெக்சாஸ் மாகாணத்தில் ஊருக்கு ஒரு ஓட்டு பெட்டி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

டெக்ஸாஸ்: ஊருக்கு ஒரு ஓட்டு பெட்டிதான் வைக்க வேண்டும் என்று அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் இது தேர்தல் காலம்.. எங்கெங்கும் டிரம்ப், ஜோ பிடன் குறித்த பேச்சுக்கள்தான், முழக்கங்கள்தான், சரமாரி புகார்கள்தான்.. கோலாகலமாக இருக்கிறது அமெரிக்காவே. அடுத்த அதிபர் யாராக இருக்கும் என்பதில் பெரிதாக சஸ்பென்ஸோ அல்லது சர்ப்பிரைஸோ இல்லை.

 Texas state Supreme Court orders to limit Ballot drop boxes to one per county

காரணம், டிரம்ப் அந்த அளவுக்கு கெட்ட பெயரை எடுத்து வைத்துள்ளார். மனிதனுக்கு அமெரிக்காவுக்கு வெளியில் மட்டுமல்லாமல் உள்ளேயும் கூட கெட்ட பெயர் நிறையவே இருக்கிறது. இதனால் ஜோ பிடன்தான் வெல்வார் என்று பொதுவாக நம்பப்படுகிறது.

தற்போது தபால் மூலம் பலரும் வாக்களித்து வருகின்றனர். நேரடியாக வாக்களிப்பது நவம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ளது. அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகத் தொடங்கும். இந்த நிலையில் நேரடியாக வாக்களிப்பது தொடர்பான ஒரு முக்கியமான தீர்ப்பை டெக்ஸாஸ் மாகாண உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

ஹேக் செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப் வெப்சைட்.. ஹேக்கர்கள் என்ன எழுதி வச்சிட்டாங்க தெரியுமா? ஹையோ ஹையோஹேக் செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப் வெப்சைட்.. ஹேக்கர்கள் என்ன எழுதி வச்சிட்டாங்க தெரியுமா? ஹையோ ஹையோ

டெக்ஸாஸ் மாகாணத்தில் ஒரு கவுன்டிக்கு ஒரு வாக்குப் பெட்டிதான் வைக்கப்பட வேண்டும் என்று மாகாண ஆளுநர் கிரேக் அப்பாட் உத்தரவிட்டிருந்தார்... இதை எதிர்த்து அம்மாகாண சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த கோர்ட் தற்போது ஆளுநரின் முடிவு சரியே என்று உத்தரவிட்டுள்ளது.. எனவே ஒவ்வொரு ஊரிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான்வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். அங்கு போய் நேரடியாக வாக்குகளைப் பதிவு செய்யலாம்.

அதேசமயம், சில மாகாணங்களில் பல இடங்களில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்படவுள்ளன. பெரும்பாலும் இந்த தேர்தலில் பலரும் தபால் மூலம் வாக்களிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நேரடியாக வந்து வாக்களிப்போர் இந்த முறை குறைவாகவே இருப்பார்கள் என்று தெரிகிறது... எல்லாத்துக்கும் காரணம் , வேற யாரு.. இந்த கொரோனாதான்!

English summary
Texas state Supreme Court orders to limit Ballot drop boxes to one per county
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X