For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிங்கப்பூரில் களைகட்டிய பொங்கல் விழா - சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் அசத்தல்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களால் பாரம்பரியம் மாறாமல் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை பொங்கோல் சமூக மன்ற இந்திய செயற்பாட்டுக் குழுவால் சில நாட்களு

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: தமிழர் திருநாளாம் தை திருநாள் பொங்கல் பண்டிகையாக 4 நாட்கள் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் வசிக்கும் தமிழர்கள் தை மாதத்தில் அந்தந்த பகுதிகளில் ஒன்று கூடி தை பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர். சிங்கப்பூரில் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் பாரம்பரியம் மாறாமல் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

பொங்கோல் சமூக மன்ற இந்திய செயற்பாட்டுக் குழுவால் சில நாட்களுக்கு முன்பு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஹவ்காங் பகுதியில் உள்ள பொங்கோல் சமூக மன்றத்தில் ஒயிலாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம் என களைகட்டியது.

தேசம் கடந்து சென்றாலும் மண் மணம் மாறாமல் கொண்டாடப்படுகிறது தமிழர்களின் பண்டிகை. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளுடன் கொண்டாடப்படுகிறது. சிறுவர் சிறுமிகளின் விளையாட்டுப்போட்டிகள், களை நிகழ்ச்சிகள் என களைகட்டும். அதே போல உற்சாகத்துடன் கிராமிய நடனங்கள் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் சிங்கப்பூரில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்

சொந்த பந்தங்களுடன் ஒன்று கூடி பண்டிகை கொண்டாடுவது மனதிற்கு இதமளிக்கும். இந்த உற்சாகம் ஓராண்டுக்கு தாக்கு பிடிக்கும். பொங்கும் பொங்கலைப்பார்த்து உற்சாக சிரிப்புடன் பொங்கலோ பொங்கல் என்று குரல் எழுப்பிய மகளிரைப் பார்த்து பண்டிகை கூடுதல் களைகட்டியது.

சிலம்பாட்டம்

பண்டிகை என்றால் பாரம்பரிய நிகழ்ச்சிகள் இல்லாமல் இருக்குமா? சிலம்பாட்டம் தமிழர்களின் வீர விளையாட்டு. தமிழகத்தை விட்டு கடல் கடந்து சென்று வசித்தாலும் அந்த பாரம்பரியம் மாறாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வீர விளையாட்டினை விளையாடி உற்சாகப்படுத்தினர்.

உற்சாக கோலாட்டம்

கோலாட்டம் ஆடுவது தனி உற்சாகம். மனதிற்கும் உடலும் புத்துணர்ச்சி தரக்கூடியது. ஆண்டு முழுவதும் வேலை செய்து களைப்படைந்தவர்கள் அந்த களைப்பு தீர இது போன்ற பண்டிகை நாளில் நண்பர்கள் உறவினர்களுடன் கூடி பண்டிகையை கோலாட்டத்துடன் கோலாகலமாக கொண்டாடினர்.

ஒயிலாட்டம்

ஒயிலாட்டம் தமிழர்களின் நாட்டுப்புற நடனம். இசைக்கேற்ற நடனமாடி ஒற்றுமையை பறைசாற்றும் நடனம். தேசம் விட்டு தேசம் வந்தாலும் நேசத்துடன் தமிழர்கள் என்ற உணர்வோடு இணைந்துள்ளோம் என்று கூறி ஒயிலாட்டம் ஆடி மகிழ்வித்தனர் இளம் பெண்கள். சிறுவர் சிறுமியர்கள் பாரம்பரிய பறை இசையும் பார்ப்பவர்களின் மனதை கொள்ளை கொண்டது.

English summary
Pongal festival celebrated Tamil People Pongole samuga mandram in hougang, Singapore. Silampattam, Oyilattam and Kollattam dance in Pongal festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X