For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடற்கரையில் ஹாயாக வாக்கிங்... பெண் கண்டுபிடித்த 'அந்த' விஷயம்... ஓவர் நைட்டில் கோடீஸ்வரிதான்

Google Oneindia Tamil News

பாங்காக்: தாய்லாந்தில் உள்ள கடற்கரையில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர் அங்குக் கண்டுபிடித்த அம்பெர்கிரிஸ் எனப்படும் திமிங்கிலத்தின் வாந்தி அவரை கோடீஸ்வரியாக மாற்றியுள்ளது.

ஒருவருக்கு எங்கு எப்படி அதிர்ஷ்டம் அடிக்கும் என்று யாருக்கும் தெரியாது! கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுட்டு தான் கொடுக்கும் என்பதற்கு ஏற்ப தாய்லாந்தில் வாக்கிங் சென்ற பெண் ஒருவர் ஓவர் நைட்டில் கோஸ்வரி ஆகியுள்ளார்.

தெற்கு தாய்லாந்தின் நகோன் சி தம்மரத் மாகாணத்தைச் சேர்ந்த 49 வயது பெண் சிரிபோர்ன் நியாம்ரின். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இவரது வீடு தாய்லாந்திலுள்ள கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. தினசரி காலையும் மாலையும் அவர் இந்த கடற்கரையில்தான் வாங்கிங் செல்வார்.

வெள்ளை பொருள்

வெள்ளை பொருள்

அப்படிக் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி இவர் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த போதுதான் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. கடந்த 23ஆம் தேதி இவர் கடற்கரையில் ஒரு மாதிரி வெள்ளை நிறத்தில் இருக்கும் பொருள் ஒன்றைக் கண்டெடுத்துள்ளார். பார்க்க பெரியதாகவும் மீன் வாசம் வந்தாலும் அது என்ன என்று சிரிபோர்ன் நியாம்ரினுக்கு தெரியவில்லை. இதனால் அவர் அதை வீட்டிற்கு எடுத்து வந்துவிட்டார்.

அம்பெர்கிரிஸ்

அம்பெர்கிரிஸ்

பின் அக்கம்பக்கத்தினரிடம் இது குறித்து அவர் கூறியுள்ளார். அவர்களின் உதவியுடன் தான் கண்டெடுத்துள்ளது அம்பெர்கிரிஸ் எனப்படும் திமிங்கிலத்தின் வாந்தி என்பது அவருக்குத் தெரியவந்ததது. திமிங்கிலத்தின் வாந்தி என்று சொன்னதும் முகத்தைத் திருப்பாதீர்கள்.மேற்கத்திய நாடுகளில் இந்த அம்பெர்கிரிஸை கொண்டுதான் மிகவும் விலை உயர்ந்த வாசனை திரவியங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த வாசனை திரவியங்களின் விலையே பல லட்சம் வரை போகும்!

பெரிய ஜாக்பான்ட்

பெரிய ஜாக்பான்ட்

இப்படியொரு மாபெரும் அதிர்ஷ்டம்தான் அந்த பெண்ணுக்குக் கிடைத்துள்ளது. சுமார் ஏழு கிலோ இருக்கும் தான் கண்டுபிடித்துள்ள அம்பெர்கிரிஸ் குறித்து தாய்லாந்து அரசுக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார். திமிங்கிலத்தின் வாந்தியான இந்த அம்பெர்கிரிஸ், அப்படியே கடலின் போக்கில் பயணித்து எதாவது நாட்டின் கடற்கரையில் கரை ஒதுங்கும். இவை பொதுவாகச் சீனா, ஜப்பான், ஆப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலேயே கரையொதுங்கும். இதைக் கண்டுபிடிப்பவர்களுக்குப் பெரிய ஜாக்பான்ட் அடித்து விட்டது என்றே பொருள்!

1.9 கோடி ரூபாய்

1.9 கோடி ரூபாய்

சிரிபோர்ன் நியாம்ரின் கண்டெடுத்துள்ள இந்த அம்பெர்கிரிஸ் உண்மையானதா இல்லையா என்பது குறித்து வல்லுநர்கள் விரைவில் பரிசோதிக்க உள்ளனர். இந்த அம்பெர்கிரிஸ் உண்மையானதாக இருக்கும்பட்சத்தில் அவருக்கு 1,86,500 பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் 1.90 கோடி) கிடைக்கும். தனக்குக் கிடைக்கும் பணத்தைத் தனது சமூகத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள உள்ளதாக சிரிபோர்ன் நியாம்ரின் தெரிவித்துள்ளார்

English summary
A 49-year-old woman from Thailand, Siriporn Niamrin, found whale vomit worth almost £186,500.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X