For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புத்த பிட்சுக்களாகும் தாய்லாந்து சிறுவர்கள்.. உலக மக்களுக்கு நன்றி செலுத்த முடிவு!

தாய்லாந்து சிறுவர்கள் எல்லோரும் தற்போது, இன்றிலிருந்து சில நாட்களுக்கு புத்த பிட்சுக்களாக வாழ்க்கை நடத்த இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பாங்காக்: தாய்லாந்து சிறுவர்கள் எல்லோரும் தற்போது, இன்றிலிருந்து சில நாட்களுக்கு புத்த பிட்சுக்களாக வாழ்க்கை நடத்த இருக்கிறார்கள். உலக மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவர்கள் இதை செய்ய இருக்கிறார்கள்.

தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் தற்போது முழு உடல் நலத்துடன் இருக்கிறார்கள்.தி தம் லுஅங் எனப்படும் தாய்லாந்தில் இருக்கும் குகைகுள் கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி சிறுவர்கள் சிக்கினார்கள்.

இந்த குறுகலான குகைக்குள் 2 வாரம் முன்பு தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள். கடும் போராட்டத்திற்கு பின் மீட்பு பணி முழு வெற்றி பெற்றுள்ளது. தாய்லாந்து குகையில் சிக்கியவர்களில் அனைவரும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

புத்த மதம்

புத்த மதம்

இந்த நிலையில் இந்த சிறுவர்கள் எல்லோரும் தற்போது புத்த பிட்சுக்களாக மாற இருக்கிறார்கள். ஆனால் வாழ்நாள் முழுக்க இல்லாமல் சில நாட்களுக்கு மட்டும் புத்த பிட்சுக்களாக இருப்பார்கள். இன்று இதற்காக மொட்டை அடித்து, புத்த மத வழக்கப்படி, அவர்கள் பிட்சுக்களாக மாறுவார்கள். இதற்காக பெரிய அளவில் விழா நடக்க உள்ளது.

எதற்காக

எதற்காக

இதில் தாய்லாந்தில் மட்டுமில்லாமல் அவர்களுக்கு உலகம் முழுக்க உதவிய மக்களுக்கு நன்றி சொல்ல இந்த நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள் . அவர்கள் புத்த மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அதன் மூலமே எல்லோருக்கும் நன்றி தெரிவிக்க போகிறார்கள். முக்கியமாக, மீட்பு பணியின் போது இறந்த சீல் வீரருக்கு காணிக்கை செலுத்த இருக்கிறார்கள்.

ஏன் இத்தனை நாட்கள்

ஏன் இத்தனை நாட்கள்

மொத்தம் 9 நாட்கள் அவர்கள் புத்த மடத்தில் துறவியாக இருப்பார்கள். தாய்லாந்து குகையில் மொத்தம் அவர்கள் 7 நாட்கள் இருந்தனர். மேலும் மீட்பு பணி இரண்டு நாட்கள் நடந்தது.இதனால் கடைசி சிறுவன் 9வது நாளில் மீட்கப்பட்டான். இதனால் அவர்கள் புத்த மடத்தில் 9 நாட்கள் இருக்க போகிறார்கள்.

பயிற்சியாளர்

பயிற்சியாளர்

அந்த அணியின் பயிற்சியாளர், ஏக்பால், ஏற்கனவே ஒரு புத்த துறவி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கடந்த பத்து வருடமாக துறவு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் . அவரும் அவர்களுடன் இந்த 9 நாட்கள் உள்ளே இருப்பார். அதேபோல் ஒரேயொரு கிறிஸ்துவ மாணவன் அதுல் சாம் மட்டும் இந்த துறவு வாழ்க்கையில் ஈடுபட மாட்டான் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Thailand Cave boys will become Buddhist novices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X