For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாய்லாந்து மீட்புக்கு செய்யப்பட்ட நீர்மூழ்கி கப்பல்.. வானத்திலும் பறக்க விடலாம்.. அடடே எலோன் மஸ்க்

தாய்லாந்து குகையில் இருந்த சிறுவர்களை மீட்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் கண்டுபிடித்த நீர் மூழ்கி கப்பலை வேறு விதமான விண்வெளி பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தாய்லாந்த் குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்க களமிறங்கிய எலோன் மஸ்க்- வீடியோ

    பாங்காக்: தாய்லாந்து குகையில் இருந்த சிறுவர்களை மீட்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் கண்டுபிடித்த நீர் மூழ்கி கப்பலை வேறு விதமான விண்வெளி பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார்.

    இரண்டு வாரம் முன்பு தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகைக்குள் தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள். விளையாட்டு சுற்றுலா சென்ற இந்த 13 பேரும் கடந்த 17 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருந்தனர்.

    பல போராட்டத்திற்கு பின் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். மூன்றுநாள் மீட்பு பணியின் முடிவாக, நேற்று முதல்நாள் மாலை எல்லோரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.

    என்ன செய்தார்

    முதலில் இவர்களை மீட்க எலோன் மஸ்க் நீர் மூழ்கி கப்பலை உருவாக்கினார். குறுகலான பாதைக்குள் ஆக்சிஜன் வசதியுடன் சிறுவர்களை உள்ளே சுமந்து செல்லும் வகையில், சிறிய மிக சிறிய நீர் மூழ்கி கப்பலை உருவாக்கி இருக்கிறார். ஆனால் இது கடைசி வரை பயன்படுத்தப்படவில்லை.

    கொடுத்துவிட்டார்

    எலோன் அவராகவே களத்தில் குதித்து இருக்கிறது. தன்னுடைய குழுவினருடன், அவர் தாய்லாந்து சென்றார். இதற்காக சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து அவர் தாய்லாந்திற்கு அவசர அவசரமாக சென்றார். தற்போது இந்த கண்டுபிடிப்பு மக்களுக்கு உதவும் என்று, மொத்தமாக அந்த நீர்முழ்கி கப்பலை மக்களிடம் கொடுத்து இருக்கிறார்.

    நன்றி

    இந்த நிலையில் தாய்லாந்தில் எல்லோரும் மீட்கப்பட்டதை குறித்து அவர் சந்தோசம் தெரிவித்து இருக்கிறார். அதில், எல்லோரும் பாதுகாப்பாக வெளியே வந்தது மிக பெரிய செய்தி. சிறப்பாக செயல்பட்ட மீட்பு குழுவிற்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

    புதிய எஸ்கேப் பாட்

    புதிய எஸ்கேப் பாட்

    ஆனால் இந்த கண்டுபிடிப்பை இன்னொரு வகையில் பயன்படுத்தவும் முடியும் என்று அவர் கூறியுள்ளார். அதன்படி பூமியின் வளிமண்டலத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டு மீண்டும் பூமிக்கு வருவதற்கு ''எஸ்கேப் பாட்'' எனப்படும் உபகரணம் பயன்படுத்தப்படும். இது வெளியே சென்றவர்கள் பூமிக்கு திரும்ப உதவும். இந்த நிலையில் இந்த நீர் மூழ்கி கப்பலை, எஸ்கேப் பாட்டாக பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

    English summary
    Thailand Cave Rescue: Elon Musk's baby-sized Sub Marine can be used in Space too as escape pod.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X