For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குகைக்குள் பயமாக இருந்தது.. நாங்கள் மீண்டதே பெரிய அதிசயம்.. தாய்லாந்து சிறுவர்கள் உருக்கம்

தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் தற்போது நிருபர்களுக்கு பொது நிகழ்ச்சியில் பேட்டி அளித்து இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    குகையில் இருந்த மீண்ட தாய்லாந்து சிறுவர்கள் உருக்கமான பேட்டி

    பாங்காக்: தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் தற்போது நிருபர்களுக்கு பொது நிகழ்ச்சியில் பேட்டி அளித்து இருக்கிறார்கள்.

    தி தம் லுஅங் எனப்படும் தாய்லாந்தில் இருக்கும் குகைக்குள் இரண்டு வாரம் முன் பள்ளி சிறுவர்கள் சிக்கினார்கள். இந்த குறுகலான குகைக்குள் 2 வாரம் முன்பு தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள். விளையாட்டு சுற்றுலா சென்ற இவர்கள் 17 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருந்தனர்.

    பல போராட்டத்திற்கு பின் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.கடும் போராட்டத்திற்கு பின் மீட்பு பணி முழு வெற்றி பெற்றுள்ளது.தாய்லாந்து குகையில் சிக்கியவர்களில் அனைவரும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். குகையில் சிக்கிய 12 சிறுவர்கள், 1 பயிற்சியாளர் உட்பட அனைவரும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

    நல்ல உடல்நிலை

    நல்ல உடல்நிலை

    இந்த சிறுவர்கள் எல்லோரும் இப்போதும் நல்ல உடல்நிலையில் இருக்கிறார்கள். நிமோனியா இருந்த இரண்டு சிறுவர்களும் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார்கள். அதேபோல் முதலில் வெளியேறிய வீரர்கள் எல்லோரும் வீட்டிற்கு திரும்பும் நிலைக்கும் தயாராகி உள்ளனர். 25 வயது பயிற்சியாளரும் நல்ல உடல்நிலையில் இருக்கிறார்.

    முன்னோக்கி செல்லும் தாய்லாந்து நிகழ்ச்சி

    முன்னோக்கி செல்லும் தாய்லாந்து நிகழ்ச்சி

    இந்த நிலையில் இவர்கள் எல்லோரும் முதல்முறையாக, தொலைக்காட்சி முன்னிலையில் தோன்றி இருக்கிறார்கள். இன்று மாலை நடந்த நிகழ்ச்சியில் அவர்கள் தோன்றி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு ''தாய்லாந்து மூவ்ஸ் பார்வர்ட்'' என்று ''முன்னோக்கி செல்லும் தாய்லாந்து'' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.

    பெரிய நிகழ்ச்சி

    பெரிய நிகழ்ச்சி

    இந்த நிகழ்ச்சியை சிறிய அளவில்தான் ஏற்பாடு செய்தார்கள். ஆனால் உலகின் உள்ள பல முக்கியமான பத்திரிக்கையாளர்கள் இந்த நிகழ்ச்சி குறித்து செய்தி வெளியிட தாய்லாந்து வந்திருக்கிறார்கள். அதேபோல் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்திய கணக்குப்படி இந்த நிகழ்ச்சி மாலை நான்கு மணிக்கு தொடங்கியது.

    என்ன பேசினார்கள்

    என்ன பேசினார்கள்

    இந்த நிகழ்ச்சியில் பயமுறுத்தும் வகையில் கேள்வி கேட்க கூடாது என்று கூறப்பட்டு இருந்தது. சிறுவர்கள் எல்லோரும், பள்ளி கால்பந்து அணி உடையில் நிகழ்ச்சிக்கு வந்து இருந்தனர். அதேபோல், கால்பந்து அணியின் பயிற்சியாளரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார், மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.

    சிறுவர்கள் அளித்த பேட்டி

    சிறுவர்கள் அளித்த பேட்டி

    சிறுவர்கள் அளித்த பேட்டியில், குகைக்குள் பயமாக இருந்தது. நாங்கள் மீள்வோம் என்று நினைக்கவே இல்லை. எல்லாம் பெரிய அதிசயம் போல நடந்து இருக்கிறது. நாங்கள் இப்போது உங்கள் முன் பேசுவதே ஆச்சர்யமான விஷயம் தான். எங்கள் உயிரை காப்பற்ற போராடிய எல்லோருக்கும் நன்றிகள் என்று தன்னம்பிக்கை மாறாமல் பேசி இருக்கிறார்கள்.

    English summary
    Thailand Cave Rescue: Feniks birds appeared on the Television for the first time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X