For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாய்லாந்து: சாப்பாடு முதல் புது துணி வரை.. மீட்பு பணியாளர்களுக்கு உதவும் உள்ளூர் மக்கள்!

தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் மீதமுள்ள 9 பேரை மீட்கும் பணி தொடங்கியுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பாங்காக்: தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களை மீட்கும் குழுவினருக்கு, உதவிகள் செய்ய உணவு வழங்க அந்நாட்டு மக்கள் களமிறங்கி இருக்கிறார்கள். இதற்காக கடந்த ஒருவாரமாக அவர்கள் உழைத்து வருகிறார்கள்.

தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் மீதமுள்ள 3 பேரை மீட்கும் பணி தொடங்கியுள்ளது. இதுவரை 10 சிறுவர்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். சிக்கலான குகைகளில் ஒன்றான தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகை என்ற குகைக்குள் சசுற்றுலா சென்ற தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள்.

கடந்த 16 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருக்கிறார்கள்.சென்ற வாரம்தான் அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது முதற்கட்ட மீட்பு பணி வெற்றிகரமாக முடிந்து மூன்றாம் கட்ட மீட்பு பணி நடந்து வருகிறது.

பல ஆயிரம் பணியாளர்கள்

பல ஆயிரம் பணியாளர்கள்

இவர்களை மீட்பதற்காக 2000 க்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் தாய்லாந்தை மட்டும் சேர்ந்தவர்கள் கிடையாது. அமெரிக்கா, ஜப்பான், சீனா , இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் கூட இவர்களை மீட்க பணியாளர்கள் வந்து உள்ளனர். இரவு பகலாக இவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

துணி துவைப்பு

இவர்கள் கடந்த ஒரு வாரமாக ஒரு துணியை மாற்றாமல் அணிந்து வருகிறார்கள். அவர்களுக்காக துணி துவைக்கவே ஒருவர் தன்னுடைய குழுவுடன் களத்தில் இறங்கியுள்ளார். எல்லோருடனும் சேர்ந்து இரவு முழுக்க துணி துவைத்து, காய வைத்து, காலை, பணியாளர்களுக்கு நல்ல நிலையில் துணியை கொடுக்கிறார். அதேபோல் கிழிந்த துணிகளையும் தைத்து கொடுக்கிறார். சிலருக்கு புது துணியும் வாங்கி கொடுத்துள்ளனர்.

சாப்பாடு உதவி

சாப்பாடு உதவி

அதேபோல் இவர்களுக்கு சாப்பாடு வழங்கவும் நிறைய பேர் முன்வந்து இருக்கிறார்கள். இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமிய படி உணவும், புத்த மதத்தை பின்பற்றுபவர்களுக்கு அதற்கு ஏற்றபடியும், கிறிஸ்துவர்களுக்கு அதற்கு ஏற்றபடியும் உணவு தயாரித்து இலவசமாக வழங்க நிறைய பேர் தயாராக பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

நல்ல வேலை

இந்த மீட்புப்பணியில் தலைமை வாகன ஓட்டியாக இருக்கும் ஜான் வொலத்தன் அளித்த பேட்டியில் ''நான் என் சொந்த விருப்பத்திற்காக வாகனம் ஓட்டி வருகிறேன், அதனால் ஏதாவது உபயோகம் இருக்கிறதா என்று யோசித்து இருக்கிறேன். என் வாழ்க்கையில் இவ்வளவு நாட்கள் பயிற்சி எடுத்தது எல்லாம் இதற்காகதான் என்று தெரிகிறது'' என்று கூறியுள்ளார்.

English summary
Thailand Cave Rescue resumes after the first phase gives huge success. 4 boys have rescued successfully so far. Hopefully, 9 more will make their way out of the cave today successfully.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X