For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாய்லாந்து: வெற்றிபெற்ற 2 வார போராட்டம்.. குகையில் சிக்கிய அனைவரும் மீட்பு!

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தாய்லாந்து குகை..சிறுவர்கள் சிக்கியது முதல் மீண்டது வரை!- வீடியோ

    பாங்காக்: தாய்லாந்து குகையில் சிக்கியவர்களில் அனைவரும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். குகையில் சிக்கிய 12 சிறுவர்கள், 1 பயிற்சியாளர் உட்பட அனைவரும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். மூன்று நாட்களாக மீட்பு பணி நடைபெற்றது.

    சிக்கலான குகைகளில் ஒன்றான தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகை என்ற மிகவும் குறுகலான குகைக்குள் தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள். கடந்த 17 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருந்தனர்.

    சென்ற வாரம்தான் அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கடும் போராட்டத்திற்கு பின் மீட்பு பணி முழு வெற்றி பெற்றுள்ளது.

    நான்கு பேர்

    நான்கு பேர்

    ஒரு நாளுக்கு நான்கு பேரை மட்டுமே மீட்க முடியும் என்று மீட்பு குழு கூறியது. இதற்கு அவர்கள் காரணமும் சொல்லி இருக்கிறார்கள். அதன்படி, ஒரு நாளில் நான்கு பேர் , மற்றும் மீட்பு குழுவினர் பயன்படுத்தும் அளவிற்கு மட்டுமே ஆக்சிஜன் சிலிண்டர்களை உள்ளே வைக்க முடியும். பின் இரவோடு இரவாக மீண்டும் புதிய சிலிண்டர்களை வைக்க வேண்டும். இதனால் இன்று வரை மீட்பு பணி தொடர்ந்தது.

    மிகவும் கஷ்டம்

    மிகவும் கஷ்டம்

    இந்த பாதையில் வருவது மிகவும் கஷ்டமான ஒன்றாக இருப்பதாக பயிற்சி பெற்ற கடல் வல்லுனர்களோ தெரிவித்து இருக்கிறார்கள். இடையில் பெரிய அளவில் மேடான இடம் இருப்பதால், அதை தாண்டுவது மிகவும் கடினமாக இருக்கிறது என்று கூறியுள்ளனர். இதனால், அந்த பகுதியில் மட்டும் சிறுவர்களை மிகவும் கஷ்டப்பட்டு அழைத்து செல்வதாக கூறப்படுகிறது. கடைசியில் வலிமையற்ற சிறுவர்கள் கொண்டு வரப்பட்டனர்.

    வலுவானவர்கள்

    வலுவானவர்கள்

    இதில் முதலில் வலுவான சிறுவர்களை மட்டுமே மீட்க வேண்டும் முடிவு செய்து இருக்கிறார்கள். அப்போதுதான் அதிக நபர்களை விரைவில் வெளியே கொண்டு வர முடியும் என்றும் கூறி இருக்கிறார்கள். அதேபோல், முதலில் சில சிறுவர்கள் வெளியே சென்றால்தான் மற்ற சிறுவர்களுக்கு நம்பிக்கை வரும் என்று கூறியுள்ளனர். அதன்படியே வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

    எப்படி இருக்கிறார்கள்

    எப்படி இருக்கிறார்கள்

    மீட்கப்பட்ட சிறுவர்கள் எல்லோரும் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் எல்லோரும், விரைவில் முழு குணமடைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவர்களை பார்க்க பெற்றோர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. உடல்நலம் கருதி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அங்கு கொஞ்சம் லேசாக மழை பெய்வதால் மீட்பு பணியில் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது.

    சீல் வைக்கப்பட்டது

    சீல் வைக்கப்பட்டது

    இந்த நிலையில் இந்த குகைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது . இனி இந்த குகைக்குள் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் மிகவும் ஆபத்தான பகுதிகளில் இதுவும் ஒன்று என்ற பெயரை இது பெற்றுள்ளது. இனி இந்து பகுதியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    English summary
    Thailand Cave Rescue resumes after the first phase gives huge success. 8 boys have rescued successfully so far. Hopefully, 5 more will make their way out of the cave today successfully.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X