For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்றைய முக்கிய செய்திகள் இவைதான்!

பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற கொடூரன் தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதை ஹைகோர்ட்டும் உறுதி செய்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கொடூரன் தஷ்வந்துக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் பிப்ரவரி 19ல் தூக்கு தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து தஷ்வந்த் தரப்பு சென்னை ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

Newest First Oldest First
8:20 PM, 10 Jul

டாஸ்மாக் கடைகளை மதியம் 2 மணிக்கு திறந்தால் என்ன? நீதிமன்றம் கேள்வி

உரிமம் இல்லாத டாஸ்மாக் பார்கள் அனைத்தும் ஒரு வாரத்திற்குள் மூடப்படும்- தமிழக அரசு பதில்
7:09 PM, 10 Jul

கோயம்பேடு, அம்பத்தூர், அண்ணா நகரிலும் மழை பெய்கிறது
7:08 PM, 10 Jul

சென்னையில் பல பகுதிகளில் மழை

சென்னை புறநகர்களில் பலத்த காற்றுடன் மழை

முகப்பேர், வளசரவாக்கம், போரூர் பகுதிகளில் நல்ல மழை

மடிப்பாக்கத்தில் பலத்த காற்றுடன் மழை

குரோம்பேட்டை சுற்றுப் பகுதிகளில் காற்றுடன் சாரல் மழை

6:56 PM, 10 Jul

மொட்டு மலராகும் முன்பே சாம்பலாக்கப்பட்டுள்ளது- நீதிபதிகள்

தஷ்வந்த செய்த குற்றத்தை விட அதை செய்ய வேண்டும் என்ற அவரது எண்ணம் கொடூரமானது

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தூக்கு தண்டனையே சரியானது

தஷ்வந்த் தூக்குக் கயிற்றில் தொங்கும் கடைசி நொடி காமத்துக்கான கடைசி நொடியாக இருக்க வேண்டும்

தஷ்வந்த் செய்த குற்றத்துக்கு தூக்கு தண்டனையை தவிர வேறு தண்டனை ஈடாகாது

கொடூரத்தின் வலியை நீதிமன்றத்தின் வார்த்தைகளால் விவரிக்க முடியாது

தஷ்வந்தின் தூக்கு தண்டனையை உறுதி செய்த விவகாரத்தில் நீதிபதிகள் விமலா, ராமதிலகம் கருத்து

6:10 PM, 10 Jul

ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் திருடிய 2 பெண்கள் கைது

பணிப் பெண்கள் வெண்ணிலா, விஜியை போலீஸார் கைது செய்தனர்

2 நாட்களுக்கு முன்பு நகைகள் திருட்டுப் போயின

விசாரணைக்குப் பின்னர் இரு பெண்களும் கைது செய்யப்பட்டனர்

5:24 PM, 10 Jul

தாய்லாந்து குகையில் சிக்கிய அனைவரும் மீட்பு

குகையில் சிக்கிய 12 சிறுவர்கள், 1 பயிற்சியாளர் உட்பட அனைவரும் மீட்பு

மூன்று நாட்களாக மீட்பு பணி நடைபெற்றது

கடும் போராட்டத்திற்கு பின் மீட்பு பணி முழு வெற்றி பெற்றுள்ளது

கடந்த 17 நாட்களுக்கு முன்பு 13 பேரும் தாய்லாந்து குகைக்குள் சிக்கினார்கள்

5:16 PM, 10 Jul

தாய்லாந்து குகையில் சிக்கியவர்களில் மேலும் 1 சிறுவன் மீட்பு

இதுவரை 11 சிறுவர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்

இன்னும் 1 சிறுவன் 1 பயிற்சியாளர் மீட்கப்பட வேண்டும்

4:11 PM, 10 Jul

கோவையில் சிறுவாணி அணை நிரம்பியது

ஆண்டின் முதல் முறையாக நிரம்பியுள்ளது சிறுவாணி

50 அடி உயரம் கொண்டது சிறுவாணி அணை

தொடர்ந்து மழை பெய்வதால் சிறுவாணி அணை நிரம்பியது

3:33 PM, 10 Jul

சிறுவர்களை மீட்கும் பணி இன்றும் தொடர்ந்து நடக்கிறது

மழையால் மீட்பு பணியில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது

தாய்லாந்து குகையில் 2 வாரம் முன்பு 13 பேர் சிக்கினார்கள்

3:33 PM, 10 Jul

தாய்லாந்து குகையில் சிக்கிய மேலும் 2 சிறுவர்கள் மீட்பு

இதுவரை 10 சிறுவர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்

இன்னும் 2 சிறுவர்கள் 1 பயிற்சியாளர் மீட்கப்பட வேண்டும்

1:46 PM, 10 Jul

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற தஷ்வந்த்துக்கு தூக்கு உறுதி

செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது ஹைகோர்ட்

12:13 PM, 10 Jul

நீட் தேர்வு வழக்கு தீர்ப்பு பற்றி டி.கே.ரங்கராஜன் பேட்டி

நீட் தேர்வு தேவையில்லை என கம்யூனிஸ்ட் கட்சி இயக்கமே நடத்தினோம்

நீட் தேர்வில் 49 தமிழ் கேள்விகள் பிழை

சிபிஎஸ்இ அமைப்பு எந்த ஒரு ஒழுங்கும் இல்லாமல் செயல்பட்டது

எங்கள் கட்சி இந்த வழக்கை தொடர வேண்டும் என உத்தரவிட்டது

12:00 PM, 10 Jul

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறக்க குமாரசாமி உத்தரவு

ஜூலை மாதத்திற்கான நீரை உடனே திறக்க குமாரசாமி உத்தரவு

காவிரி நீரின் அளவு விநாடிக்கு 35,000 கனஅடியில் இருந்து 38,000 கனஅடியாக அதிகரிப்பு

11:19 AM, 10 Jul

தமிழில் நீட் எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்

ஹைகோர்ட் தீர்ப்பால் கிராமப்புற மாணவர்களுக்கு பலன்

ஹைகோர்ட் தீர்ப்புக்கு தமிழக கல்வியாளர்கள் வரவேற்பு

தாய் மொழியில் தேர்வு எழுதுவோரை ஊக்கப்படுத்தும் தீர்ப்பு என கருத்து

11:10 AM, 10 Jul

ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக தர வேண்டும்

மொத்தம் 49 வினாக்களில் மொழியாக்க பிழை இருந்ததாக வழக்கு

11:09 AM, 10 Jul

நீட் வினாத்தாள் குளறுபடி வழக்கில் 196 மதிப்பெண்கள் வழங்க உத்தரவு

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மருத்துவ கலந்தாய்வுக்கு புதிய தரவரிசைப்பட்டியல் வெளியிடவும் ஹைகோர்ட் கிளை உத்தரவு

11:08 AM, 10 Jul

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்: ஹைகோர்ட் உத்தரவு

வினாத்தாளில் ஏற்பட்ட பிழை காரணமாக கருணை மதிப்பெண்

புதிய தரவரிசை பட்டியல் உருவாக்க ஹைகோர்ட் உத்தரவு

11:04 AM, 10 Jul

சென்னையில் மீன்களில் ரசாயனம் கலக்கப்படுவதாக பகீர் தகவல்

காசிமேடு மீன் மார்க்கெட்டில் 2வது நாளாக அதிகாரிகள் சோதனை

பார்மலின் என்ற ரசாயனத்தை கலப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

10:26 AM, 10 Jul

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப. சிதம்பரத்தை ஆக.7 வரை கைது செய்ய தடை நீட்டிப்பு

கார்த்தி சிதம்பரத்தையும் கைது செய்ய தடையை நீட்டித்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்

8:52 AM, 10 Jul

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை உள்ளிட்ட இடங்களில் மாலை மழை பெய்யும்

கடலோர மாவட்டங்களில் அதிக அளவில் காற்று வீசும்

8:40 AM, 10 Jul

ஜப்பானில் பெய்து வரும் மழையால் 130 பேர் பலி

4 நாட்களில் 650 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது

4 நாட்களில் பெய்த மழையால் 130 பேர் பலி

300க்கும் அதிகமானோர் காணவில்லை என்பதால் பதற்றம்

8:29 AM, 10 Jul

அமித்ஷா வருகையால் தமிழகத்தில் மழை பெய்துள்ளது- தமிழிசை சவுந்தரராஜன்

இந்த மழையால் தமிழக குளங்கள் நிரம்பும்

நீர் நிரம்பினால் தாமரை தானாக மலரும் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

8:16 AM, 10 Jul

சிறுமி ஹாசினி கொலையாளி தஷ்வந்தின் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

செங்கல்பட்டு நீதிமன்றம் விதித்த தூக்கை ரத்து செய்ய கோரி தஷ்வந்த் மேல்முறையீடு

தாய் சரளா, சிறுமி ஹாசினையை கொன்ற குற்றத்திற்காக தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது

மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது

8:08 AM, 10 Jul

தமிழில் நீட் எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு

49 வினாக்களுக்கு மதிப்பெண் வழங்கக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டது

உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் இன்று காலை தீர்ப்பளிக்க உள்ளனர்

8:08 AM, 10 Jul

தாய்லாந்து குகையில் சிக்கிய மேலும் 4 சிறுவர்கள் மீட்பு

இதுவரை 8 சிறுவர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார்

இன்னும் 4 சிறுவர்கள் 1 பயிற்சியாளர் மீட்கப்பட வேண்டும்

சிறுவர்களை மீட்கும் பணி இன்றும் தொடர்ந்து நடக்கிறது

தாய்லாந்து குகையில் 2 வாரம் முன்பு 13 பேர் சிக்கினார்கள்

8:08 AM, 10 Jul

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் லண்டன் பயணம்

நேற்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டன் சென்றார்

லண்டனில் ஒருவாரம் தங்கி இருப்பார் என்று தகவல்

ஸ்டாலினுடன் மனைவி துர்கா ஸ்டாலினும் லண்டன் சென்றுள்ளார்

English summary
Thailand Cave Rescue resumes after the first phase gives huge success. 8 boys have rescued successfully so far. Hopefully, 5 more will make their way out of the cave today successfully.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X