For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாய்லாந்து மீட்புப் பணிகள் நிறுத்தம்.. இதுவரை 4 சிறார்கள் மீட்பு.. 9 பேர் நாளை மீட்கப்படுவர்

தாய்லாந்து குகையில் சிக்கித் தவித்த 6 இளம் கால்பந்து வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தாய்லாந்தில் மீதமுள்ள சிறுவர்களை மீட்கும் பணி மீண்டும் தொடக்கம்- வீடியோ

    பாங்காங்: தாய்லாந்து குகைக்குள் சிக்கிய கால்பந்து வீரர்களில் 4 சிறார்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி நாளை தொடரவுள்ளது.

    தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகை என்ற மிகவும் குறுகலான குகைக்குள் தாய்லாந்தை சேர்ந்த இளம் பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டிக் கொண்டனர். கடந்த 10 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருக்கிறார்கள். நேற்றுதான் அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

    Thailand football team rescued from cave

    இதையடுத்து அவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. குகையின் வேறு பகுதியில் துளையிட்டு அது வழியாக தண்ணீரை உறிஞ்சி மாணவர்களை வெளியே கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் மாணவர்களுக்கு பிராண வாயு சப்ளை செய்ய 100-க்கும் மேற்பட்ட சிம்னிகள் மூலம் துளையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் துளையிடும் போது மற்ற பாகங்கள் இடிந்து விழுந்தால் நிலைமை சிக்கலாகிவிடும் என்பதால் அதி்ல் குழப்பம் நிலவியது.

    Thailand football team rescued from cave

    இந்த சூழலில் இன்று 4 சிறார்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நாளை மீண்டும் அது தொடரும். இன்னும் 8 சிறார்களும், அவர்களின் பயிற்சியாளரும் மீட்கப்பட வேண்டியுள்ளது. நாளை அவர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள்.

    English summary
    'First six members of Thai football team rescued from cave', reports quoting local official.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X