For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்களுடன் சதா உல்லாசம்.. மன்னருக்கு எதிராக வீதிக்கு வந்த மக்கள்.. தாய்லாந்தில் எமெர்ஜென்சி பிரகடனம்

Google Oneindia Tamil News

பாங்காங்: தாய்லாந்தில் இன்று முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

தாய்லாந்து மன்னரான மஹா வஜிரலோங்கார்ன் பெரும் உல்லாச விரும்பி. அவர் பெரும்பாலும் தனது நாட்டில் இருப்பது கிடையாது. ஜெர்மனியில் இளம்பெண்களுடன்தான் செலவிடுவார்.

இப்படி அவர் இருப்பதால், வஜிரலோங்கார்ன், நேற்று தனது தந்தையின் நினைவு நாளை அனுசரிப்பதற்காக ஜெர்மனியிலிருந்து தாய்லாந்து திரும்பியிருந்தார்.

பதவி விலகல்

பதவி விலகல்

ஏற்கனவே கோபத்திலிருந்த மக்கள், ஒன்று கூடி வஜிரலோங்கார்னுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். மன்னரின் ஆட்சியில் சீரமைப்புகள் கொண்டு வரவேண்டும், பிரதமர், பதவி விலகவேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராட்டங்களை நடத்தினர்.

மன்னர் கார்

மன்னர் கார்

ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். நேற்று மன்னர் நாடு திரும்பியபோது அவர் பவனி வந்த காரை மக்கள் மறிக்க முயன்றனர். இதனால் அவர் கடும் கோபம் அடைந்தார். இன்று அதிகாலையிலேயே அந்த நாட்டு அரசு அவசர நிலையை பிரகடனம் செய்துவிட்டது.

ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

மக்கள் ஐந்துபேர் அல்லது அதற்கு மேல் யாரும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தேசிய பாதுகாப்புக்கு ஊறு ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட அனைத்துவகை ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னருக்கு எதிரான போராட்டங்களை முன்னின்று நடத்திய தலைவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சல்யூட் போராட்டம்

சல்யூட் போராட்டம்

ஆனால், இதற்கு மாற்றாக போராட்டக்காரர்கள் வேறு வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர். மன்னருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மூன்று விரலால் சல்யூட் செய்கிறார்கள். ஆனால் இப்போது மக்கள் கூட முடியவில்லை என்றபோதிலும், இந்த எதிர்ப்பு கடைபிடிக்கப்படுகிறது.

எமெர்ஜென்சி

எமெர்ஜென்சி

தாய்லாந்தில் என்ன நடக்கிறது என்பது ஊடகங்கள் வழியாக வெளியே போய்விடாமல் இருக்க அவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவால், தாய்லாந்தில் எமெர்ஜென்சி உள்ள நிலையில், இந்த எமெர்ஜென்சி எப்படி வித்தியாசப்படுகிறது என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

English summary
Thailand's government declared a strict new state of emergency for the capital on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X