For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டது.. அழிவின் ஆரம்பமா.. ஆய்வு என்ன சொல்கிறது

இரவுக்கும் பகலுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் குறைந்து வருவதாக அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்: இரவுக்கும் பகலுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் குறைந்து வருவதாக அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரவை விட பகலின் நேரம் அதிகம் ஆகிவிட்டதாக கூறியுள்ளனர்.

மேலும் பூமி முழுக்க பல பகுதிகளில் இரவும் பகல் போலவே மாறிவருவதாக கூறியுள்ளனர். மேலும் அவர்கள் ஆசியாவில் இருக்கும் பல நாடுகள் குறித்தும் அதிர்ச்சி தரக்கூடிய பல தகவல்களை கொடுத்துள்ளனர்.

அவர்கள் இந்த ஆய்வை கடந்த சில வருடங்களாக உலகில் நடக்கும் மாற்றங்களை வைத்து செய்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

பகல் நேரம்

பகல் நேரம்

அமெரிக்காவை சேர்ந்த 'கிப் கோட்ஐஸ்' என்பவர் தன் சக அறிஞர்களுடன் சேர்ந்து பகல் இரவு நேரம் குறித்த ஆராய்ச்சி ஒன்றை கடந்த சில வருடங்களாக செய்து வந்தார். இதற்காக அவர்கள் பல நாடுகள் சுற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் தங்கள் ஆராய்ச்சி குறித்த இறுதி அறிக்கையை கட்டுரையாக ''சைன்ஸ் அட்வான்ஸ்'' என்ற நிறுவனத்திடம் சமர்ப்பித்துள்ளனர். அவர்களின் ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்து இருக்கிறது.

ஒளி அளவு அதிகம்

ஒளி அளவு அதிகம்

அவர்களின் ஆராய்ச்சியின் படி பல இடங்களில் பகலுக்கும், இரவுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய் இருக்கிறது. நிறைய இடங்கள் இரவில் கூட மிகவும் அதிக வெளிச்சத்துடன் காணப்பட்டு இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் 2.5 சதவிகிதத்திற்கும் அதிகமாக பூமியின் ஒளி அளவு அதிகரித்து இருக்கிறது. இதனால் பகல் அளவு ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

பாதிப்பு எங்கு

பாதிப்பு எங்கு

மேலும் இந்த சோதனையில் எந்த நாடுகள் எல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று கூறப்பட்டு இருக்கிறது. அதன்படி எண்ணெய் வள நாடுகளான துபாய் மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகள் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஆசியாவில் இருக்கும் இந்தியா, மலேசியா, சீனா போன்ற நாடுகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த நாடுகளில் இரவுகளே இருக்காது என்றும் அந்த அறிக்கை தெரிவித்து இருக்கிறது.

காரணம் என்ன

காரணம் என்ன

இந்த நிலையில் இந்த மாற்றத்துக்கு காரணம் என்ன என்றும் ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர். அதன்படி மேற்கண்ட நாடுகளில் பயன்படுத்தப்படும் மிகவும் மோசமான விளக்குகளே அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது பயன்படுத்தும் விளக்குகளை மொத்தமாக தவிர்த்துவிட்டு புதிய விளக்குகளை கண்டுபிடித்தால் மட்டுமே எதிர்காலத்தில் இருளை பார்க்க முடியும் என்று கூறுகின்றனர்.

English summary
The difference between day and night is disappearing in many countries. The most heavily populated regions of the Earth has affected by this
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X