For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடக்கொடுமையே.. ஈபிள் டவரையே மூடிட்டீங்களா!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    உலக அதிசயமான ஈபிள் டவர் தற்காலிகமாக மூடப்பட்டது- வீடியோ

    பாரிஸ்: கூட்ட நெரிசல் காரணமாக உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவருக்கு சுற்றுலா பயணிகள் செல்ல விடாமல் தடை போடப்பட்டுள்ளது.

    பிரான்ஸ் நாட்டின், பாரிஸ் நகரில் உள்ள உலக புகழ் பெற்ற சுற்றுலாதளமான ஈபிள் டவர் உலக 7 அதிசயங்களில் ஒன்றாகும். இந்த கோபுரத்தை சுற்றிப்பார்க்க வெளிநாட்டிலிருந்தும் சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம்.

    The Eiffel Tower closed to visitors

    கடந்த மாதம் ஈபிள் டவரை சுற்றி பார்ப்பதற்கான நுழைவு சீட்டை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்ற புதிய முறை கொண்டுவரப்பட்டது.

    இதனை அடுத்து கடந்த புதன் கிழமை ஆன்லைனில் பதிவு பெற்றவர்களும் நேரில் நுழைவு சீட்டு பெற்று பார்வையிட வந்தவர்களும் ஒரே நேரத்தில் குவிந்தததால் அங்கு மாபெரும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    இதனால் ஈபிள் டவர் ஊழியர்கள் கோபமடைந்தனர். 300க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக கூறிவிட்டு சென்றுவிட்டனர்.

    இதையடுத்து ஈபிள் டவர் பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தெரியாமல் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாந்து செல்கிறார்கள். இன்று ஈபிள் டவர் மீண்டும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    English summary
    The Eiffel Tower closed to visitors since Wednesday afternoon, is to reopen on Friday after workers went on strike over unacceptably long queues at the Paris landmark.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X