For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரட்டை கோபுர தாக்குதல் தினம்.. ஃபாலிங்மேன் யார்.. சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Devastating 9/11 terrorist attacks unfolded in September 2001

    டெல்லி: செப்டம்பர் 11-ஆம் தேதி 2001-ஆம் ஆண்டை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்திருக்க முடியாது.

    அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுரங்களில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் 4 பயணிகள் விமானங்களை கடத்தி சென்று இரட்டை கோபுரங்களின் மீது இரு விமானங்களை மோத செய்து தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதல் சம்பவத்தில் 3000 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் நிகழ்ந்து 18 ஆண்டுகள் முடிவடைந்து 19-ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சில சம்பவங்கள் வாசகர்களுக்கு நினைவூட்ட பகிரப்பட்டுள்ளது.

    வடக்கு கோபுரம் எரிந்து கொண்டிருந்த காலை 9.41 மணிக்கு அந்த தாக்குதல்களை அங்கிருந்த கேமராக்கள் தொடர்ந்து படம் பிடித்து கொண்டிருந்தன. அப்போது வடக்கு கோபுரத்திலிருந்து யாரோ ஒருவர் கீழே குதிக்கும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டது.

    The Falling Man, an image that will never forget on September 11

    ஃபாலிங் மேன் என கூறப்படும் இவர் குறித்த சில தகவல்களை பார்ப்போம்.

    • ஃபாலிங் மேன் குறித்த புகைப்படத்தை பிரஸ் போட்டோகிராபர் ரிச்சர்ட் டிரியூ படம் பிடித்தார்.
    • அந்த நபர் யார் என்பது குறித்த கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.
    • ஃபாலிங் மேன் அங்கிருந்த பேக்கரியின் செஃப் நார்பீட்டோ ஹெர்நான்டெஸ்ஸாக இருக்கலாம் என ஒரு செய்தியாளர் யூகித்தார்.
    • அந்த நபர் நெருப்பிலிருந்தும் புகையிலிருந்தும் தப்பிக்க பாதுகாப்புக்காக குதித்தாரா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
    • புகைப்படத்தில் அந்த நபர் நேராக குதிப்பதை போன்று உள்ளது. ஆனால் அவர் எந்தவித கட்டுப்பாடும் இன்றி குதிப்பதை போன்ற அந்த படங்கள் காட்டுகின்றன.
    • இந்த புகைப்படம் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் முதல் முறையாக செப்டம்பர் 12, 2001-இல் வெளியானது.
    • அந்த புகைப்படத்தில் " உலக வர்த்தக மையத்தின் வடக்கு கோபுரத்திலிருந்து ஒருவர் தலைகீழாக விழும் காட்சி. விமானங்கள் கோபுரத்தில் மோதியவுடன் இந்த காட்சிகள் பல முறை காண்பிக்கப்பட்டது" என அந்த படவரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால் இந்த புகைப்படம் ஒரு முறை மட்டுமே பிரசுரிக்கப்பட்டது.
    • 6 வருடங்கள் கழித்து, அதாவது 2007-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி நியூ யார்க் டைம்ஸ் புத்தகத்தில் முதல் பக்கத்தில் இடம்பெற்றிருந்தது.
    • 2006-ஆம் ஆண்டு ஃபாலிங் மேன் என்ற ஆவணப்படம் வெளியானது
    • இந்த படத்தை ஹென்றி சிங்கெர் தயாரித்தார்.

    English summary
    No one forget the falling man image which was on September 11, 2001.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X