For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பூமியை நோக்கி வரும் முதல் விண்கல்.. என்ன செய்ய காத்து இருக்கிறது?

ஒமுஅவுமா என்ற வித்தியாசமான விண்கல் பூமியை கடந்து செல்ல இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்: 'ஒமுஅவுமா' என்ற விண்கல் சரியாக ஒரு வாரத்திற்கு முன் பூமிக்கு அருகில் வந்தது. இன்னும் சில தினங்களில் அந்த விண்கல் பூமியை கடந்து செல்லும் என்று கூறப்படுகிறது.

எப்போதும் ஏலியன் குறித்து வெளியாகும் தகவலை போல் வதந்தியாக இல்லாமல் இது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. பூமிக்கு சொந்தம் இல்லாமல் பூமிக்கு மேல் பறக்க போகும் ஒரே விண்கல் இதுமட்டும்தான்.

இதற்கு ஒமுஅவுமா என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

உலகின் முதல் விண்கல்

உலகின் முதல் விண்கல்

சரியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு பூமிக்கு அருகில் வித்தியாசமான விண்கல் ஒன்று வந்தது. பார்ப்பதற்கு சிகரெட் வடிவில் இருக்கும் இந்த விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது. இதன் அளவு 400 மீட்டர் நீளம் மட்டுமே உள்ளது. மேலும் ஒருபக்கம் முழுக்க சிவப்பாகவும், ஒரு பக்கம் முழுக்க கருப்பாகவும் இருக்கிறது. இந்த விண்கல் கண்டிப்பாக சூரிய குடும்பத்திற்கு சொந்தமான விண்கல் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. உலகிலேயே முதல் முறையாக பூமிக்கு சொந்தம் இல்லாமல் வானத்தில் பறந்த முதல் பொருள் இதுதான்.

மிகவும்

மிகவும்

இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்ட போது இது சூரியனுக்கும் மிக அதிக தொலைவில் இருந்தது. ஆனால் தற்போது இது பூமியை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகிறது. பூமிக்கு அருகில் வரவர இதன் வேகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பூமிக்கு மிக அருகில் வந்துள்ள இது தற்போது 90 கிமீ வேகத்தில் செல்கிறது. பூமிக்கு சொந்தம் இல்லாத ஒரு விண்கல் இவ்வளவு வேகத்தில் செல்வது இதுவே முதல்முறை ஆகும்.

எங்கிருந்து

எங்கிருந்து

இந்த விண்கல் கண்டிப்பாக சூரிய குடும்பத்திற்கு சொந்தமான விண்கல் இல்லை. மேலும் இது சூரியனுக்கு பின் பகுதியில் இருந்து வந்துள்ளது. இதில் ஏலியன்கள் இருக்க வாய்ப்பில்லை என்றுதான் கூறப்படுகிறது. ஆனாலும் ரஷ்யா தற்போது அங்கு ஏலியன்கள் இருக்குமா என்று ஆராய்ச்சி செய்து வருகிறது. இதற்காக 650 கோடி வரை செலவு செய்யப்பட உள்ளது.

பூமிக்கு என்ன பிரச்சனை

பூமிக்கு என்ன பிரச்சனை

இந்த விண்கல் பூமிக்கு மிக அருகில் செல்லும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதன் காரணமாக பூமிக்கு எந்த விதத்திலும் பிரச்சனை ஏற்படாது. மேலும் இது பூமியை கடந்து அப்படியே விண்வெளியில் காணாமல் போய்விடும் என்று கூறப்படுகிறது. தற்போது இதன் வேகம் மிகவும் அதிகம் ஆகி உள்ளதால் சீக்கிரமே பூமியை கடந்துவிடும் என்று கூறப்படுகிறது.

English summary
The first known Oumuamua interstellar object will pass through the Solar System.A Russia millionaire spends 650 crore for alien research. He spends this money to research the cigar-shaped asteroid, named 'by its discoverers which cross earth an week ago.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X