For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூக்கு இன்றி பிறந்த அபூர்வக் குழந்தை... வாசனை என்பதையே அறியாத சோகம்!

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் மூக்கு இல்லாமல் சுவாசித்து வாழ்ந்து வருகிறது 17 மாத அபூர்வ பெண் குழந்தை ஒன்று.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் நாதன் - கிரன்னி தம்பதி. இவர்களுக்கு டீசா என்றா பெயரில் 17 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. இக்குழந்தை பிறக்கும் போதே மூக்கு இல்லாமல் பிறந்துள்ளது.

மூக்கு இல்லாமல் வாழ முடியுமா என்ற மற்றாவர்களின் சந்தேகத்தை முறியடித்து வாழ்ந்து வருகிறது இக்குழந்தை. விரைவில் இக்குழந்தைக்கு செயற்கை மூக்குப் பொருத்த மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கன்ஜெண்டல் அர்கினி...

கன்ஜெண்டல் அர்கினி...

மூக்கு இல்லாமல் பிறக்கும் குறைபாட்டிற்கு ‘கன்ஜெண்டல் அர்கினியா' (congenital arhinia) என்று பெயர்.

40 குழந்தைகள் மட்டுமே...

40 குழந்தைகள் மட்டுமே...

இக்குறைபாட்டுடன் இதுவரை உலகில் 40 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளதாக மருத்துவ உலகம் சொல்கிறது.

செயற்கை மூக்கு...

செயற்கை மூக்கு...

மூக்கு இல்லாமல் பிறந்த டீசா தன்னுடைய வாயின் மூலமே மூச்சுவிட்டு உயிர் வாழ்ந்து வருகிறார். இந்த குழந்தையை பரிசோதனை செய்த பிரிட்டன் மருத்துவர்கள் செயற்கை மூக்கு பொருத்த ஆலோசனை செய்து வருகின்றனர்.

சளித் தொந்தரவு...

சளித் தொந்தரவு...

தனது அபூர்வ குழந்தை குறித்து கிரன்னி கூறுகையில், ‘வாசம் என்பதையே என்னவென்று அறியாத டீசாவுக்கு அடிக்கடி சளி மற்றும் இருமல் தொந்தரவு ஏற்படுவதுண்டு' எனத் தெரிவித்துள்ளார்.

புன்னகை அரசி...

புன்னகை அரசி...

மேலும், மூக்கு இல்லாமல் இருந்தாலும், தன்னுடைய குழந்தை எப்போது புன்னகையுடன் இருப்பாள் என்றும் அவளது அந்த புன்னகை விலை மதிப்பு இல்லாதது என்றும் கிரன்னி தன் மகள் குறித்து பெருமை பட்டுக் கொள்கிறார்.

தாயார் நம்பிக்கை...

தாயார் நம்பிக்கை...

இந்த வருடத்தில் டீசாவுக்கு செயற்கை மூக்கு பொருத்தப்படும் என்றும், விரைவில் மற்ற குழந்தைகளை போல தனது மகளும் வாசனையை நுகர்வாள் என்றும் டீசாவின் அம்மா கிரன்னி நம்பிக்கையுடன் கூறுகிறார்.

English summary
Tessa Evans loves running around, playing outside and blowing kisses. But unlike any other children, she suffers from an extremely rare condition which means she has no nose. The 17-month-old has complete congenital arhinia, which is so rare there are only around 40 cases reported in medical literature.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X