ஹேக்கரிடம் கெஞ்சும் உபேர் நிறுவனம்.. திருடிய தகவல்களை பாதுகாக்க லட்சக்கணக்கில் பேரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஹேக்கரிடம் கெஞ்சும் உபேர் நிறுவனம்.. திருடிய தகவல்களை பாதுகாக்க லட்சக்கணக்கில் பேரம்!- வீடியோ

  நியூயார்க்: சில மாதங்களுக்கு முன்பு உபேர் நிறுவனத்தின் சர்வர் மர்ம நபர் ஒருவரால் ஹேக் செய்யப்பட்டது. இதன் காரணமாக பல முக்கியமான தகவல்கள் அந்த நிறுவனத்தின் கையை விட்டு போனது.

  இந்த நிலையில் தற்போது உபேர் நிறுவனம் இந்த ஹேக்கரிடம் சமரசம் பேச முடிவு செய்துள்ளது. அதன்படி அவருக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்க முன்வந்துள்ளது.

  உலகிலேயே ஹேக்கருக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்தது இதுவே முதல் முறையாகும். எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது, யார் அந்த ஹேக்கர் என்பது குறித்து மறைமுகமாக சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

  உபேர் ஹேக்

  உபேர் ஹேக்

  பிரபல உபேர் நிறுவனத்தின் சர்வர் சென்ற வருடம் அக்டோபர் மாதம் ஹேக் செய்யப்பட்டது. இதன் காரணமாக 5.7 கோடி பயணிகள் குறித்த தகவலும், 6 லட்சம் ஓட்டுநர்களின் விவரங்களும் ஹேக்கர் கைக்கு சென்றது. ஒரே நாளில் 10 நிமிட இடைவெளியில் இந்த ஹேக்கிங் செய்யப்பட்டது. இந்த சம்பவம் நடந்து ஒருவருடம் ஆகியும் யார் ஹேக் செய்தது என்று கண்டுபிடிக்கப்படவில்லை.

  பெரிய பிரச்சனை

  பெரிய பிரச்சனை

  இந்த ஹேக்கிங் விஷயம் சில நாட்களில் வெளியே தெரிய வந்தது. இதன் காரணமாக உலக மீடியாக்கள் அனைத்தும் உபேர் நிறுவனத்தை கிழித்து தோரணம் கட்டியது. பலரும் உபேர் வாகனங்களில் பயணிப்பதை நிறுத்தினார்கள். உபேர் நிறுவனத்தின் வருமானம் ஒரே அடியாக படுத்தது. மேலும் சிலர் உபேர் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க போவதாகவும் கூறினார்கள்.

  பணம் கொடுக்கப்பட்டது

  பணம் கொடுக்கப்பட்டது

  இந்த நிலையில் உபேர் நிறுவனம் அந்த ஹேக்கர் யார் என்பதை கண்டுபிடித்துள்ளது. மேலும் அந்த ஹேக்கரிடம் உண்மை தகவல்களை வெளியே தெரிவிக்காமல் இருக்க பணம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்த நிறுவனம் ஹேக்கருக்கு இந்திய மதிப்பில் 65 லட்சம் பணம் அனுப்ப உள்ளது. மேலும் இனி இது போல ஹேக் செய்யமாட்டேன், ஹேக் செய்த தகவல்களை வெளியே விட மாட்டேன் என்றும் கையெழுத்து வாங்கி இருக்கிறது.

  செய்தது யார்

  செய்தது யார்

  இந்த மோசமான செயலில் ஈடுபட்டது யார் என்று இன்னும் வெளியே சொல்லப்படவில்லை. ஆனால் அவர் அமெரிக்காவை சேர்ந்தவர் என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் அவருக்கு நோயால் பாதிக்கப்பட்ட தாய் இருப்பதாகவும், அப்பா இல்லை என்றும் கூறப்படுகிறது. அம்மாவின் மருத்துவ செலவை சமாளிக்கவே இப்படி ஹேக் செய்ததாக அந்த ஹேக்கர் உபேர் நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The Hacker rewarded by Uber to keep the data breach secret. The Uber has rewarded the hacker $100,000 to destroy the information and not share with anyone.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற