For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மாடியோவ்.. எவ்வளவு பெரிய மாஸ்க்.. 35 கிலோ எடையாம்.. சரி.. இதை யாருக்கு போட்டாங்க தெரியுமா?

Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பானில் 35 கிலோ எடையுள்ள மிகப்பெரிய மாஸ்க் வடிவமைத்துள்ளனர். பிரமாண்ட சாமி சிலைக்கு இந்த மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் ஆட்சி செய்து வருகிறது. மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட தடுப்பு வழிமுறைகளே கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் முக்கிய ஆயுதமாகும்.

இதிலும் மாஸ்க்கின் பங்கு அளப்பரியது. ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு கொரோனா பரவாமல் தடுப்பதில் மாஸ்க் இன்றியமையாத வேலையை செய்து வருகிறது.

மாஸ்க்கின் அவசியம்?

மாஸ்க்கின் அவசியம்?

இதனால்தான் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் அனைவரும் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்படுகிறது. மக்களை கவருவதற்காக பல்வேறு நிறுவனங்களும் விதவிதமான மாஸ்க் உற்பத்தி செய்தது. குழந்தைகளுக்கு கார்டூன் படம் பொறித்த மாஸ்க், பெண்களுக்கு அவர்கள் அணியும் ஆடையின் நிறத்திற்கேற்ப மாஸ்க் என விதவிதமான மாஸ்க் வந்தது.

உலகின் மெகா சைஸ் மாஸ்க்

உலகின் மெகா சைஸ் மாஸ்க்

ஆனால் நாம் இப்போது பார்க்க போவது உலகின் மெகா சைஸ் மாக்ஸ். இந்த மாஸ்க்கின் எடை மட்டும் சுமார் 35 கிலோ. சுமார் 5.3 மீட்டர் அளவு இருக்கும். இளஞ்சிவப்பு நிற துணியால் செய்யப்பட்ட இந்த மிகப் பெரிய மாஸ்க்கை ஜப்பானில் வடிவமைத்துள்ளனர். இவ்வளவு பெரிய மாஸ்க்கை யாருக்கு வடிவமைப்பு செய்தார்கள் என்று கேட்கிறீர்களா?

சாமி சிலை

சாமி சிலை

ஜப்பானின் புகுஷிமா மாகாணத்தில் உள்ள புத்தர் கோயிலில் சுமார் 187 அடி உயரம் உள்ள கண்ணோன் என்ற பிரமாண்ட சாமி சிலை உள்ளது. இந்த பெண் தெய்வத்துக்கு அணிவிப்பதற்குத்தான் பிரமாண்ட மாஸ்க் தயாரித்துள்ளனர். நான்கு தொழிலாளர்கள் மூன்று மணி நேரம் போராடி மிக பெரிய மாஸ்க்கை அந்த சாமி சிலைக்கு அணிவித்து விட்டனர். சாமி சிலைக்கு எதுக்கு மாஸ்க்? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.

மக்கள் நம்பிக்கை இதுதான்

மக்கள் நம்பிக்கை இதுதான்

சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த சாமி சிலை கையில் ஒரு குழந்தையை ஏந்தியபடி காட்சி தருகிறது. இந்த பெண் தெய்வத்தை வணங்கினால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம், பிறக்கும் குழந்தைகள் நல்ல உடல் நலத்துடன் இருப்பார்கள் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. எனவே சாமி சிலைக்கு மாஸ்க் அணிவித்தால் தங்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு கொரோனா பரவாமல் தடுக்கப்படும் என்று மக்கள் நம்புகின்றனர். இதனை மனதில் வைத்தே சாமிக்கு மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The largest mask designed to weigh 35 kg in Japan. This mask is worn to the Goddess statue The largest mask designed to weigh 35 kg in Japan. This mask is worn to the Goddess
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X