For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விண்ணில் ஏவிய ஒரே நிமிடத்தில் வெடித்து சிதறிய சீனாவின் ராக்கெட்.. என்ன காரணம்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: விண்ணில் ஏவிய ஒரே நிமிடத்தில் சீனாவின் குய்சோ - 11 ராக்கெட்வெடித்து சிதறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஞ்ஞானிகள்,இதற்கு என்ன காரணம் என ஆயவு செய்து வருகிறார்கள்

Recommended Video

    China Rocket Launch Failure : விண்ணில் ஏவிய ஒரே நிமிடத்தில்! என்ன காரணம்?

    சீனா மூன்று ஆண்டு தாமதத்திற்கு பின்னர் குய்சோ - 1A என்ற ராக்கெட்டை மேம்படுத்தி புதிய தொழில்நுட்பத்துடன் புதிய ராக்கெட் தயாரிக்கப்பட்டது. இதற்கு குய்சோ - 11 என்று பெயரிடப்பட்டது. இந்த செயற்கை கோள் 2.2 மீட்டர் விட்டதையும், 700 டன் எடையையும் கொண்டது.

     The maiden launch of China’s Kuaizhou-11 rocket ends in failure on today

    இந்த ராக்கெட் பூமியில் இருந்து 700 கிலோ மீட்டர் தூரத்தில் சூரியனின் சுற்றுப்பாதையில் 1000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை நிலைநிறுத்த முடியும். சீனா விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்துறை கழகத்தின் துணை நிறுவனமான எக்ஸ்பேஸ் டெக்னாலஜி கார்ப்பரேஷன் இந்த ராக்கெட்டை உருவாக்கி இருந்தது

    போலி விமானிகள்.. அதிர்ந்த அமெரிக்கா.. பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு தடைபோலி விமானிகள்.. அதிர்ந்த அமெரிக்கா.. பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு தடை

    இதையடுத்து குய்சோ - 11 ராக்கெட் இரண்டு செயற்கைகோள்களுடன் பெய்ஜிங் நேரப்படி 12: 17 மணிக்கு வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் ராக்கெட் தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் பயணத்தை தொடங்கிய ஒரு சில நிமிடத்தில் நிலை தடுமாறி, குவைசோவ் -11 ராக்கெட் வானத்தில் வெடித்து சிதறியது.

    புறப்பட்ட சிலநிமிடத்தில் ராக்கெட் வெடித்து சிதறியது ஏன் என்பது குறித்து ஜியுகுவான் விண்வெளி மையத்தின் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    English summary
    The Chinese Kuaizhou-11 rocket is a low-cost solid-fuelled carrier rocket that has a lift-off mass of over 70 tonne.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X