For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒன்றுக்கு ஒன்று மோதி அழியப் போகும் பால்வழிப் பாதையும், ஆண்ட்ரோமெடா காலக்ஸியும்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இன்னும் நான்கு அல்லது ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் நமது பால்வழி மண்டலமும், நமக்கு அருகாமையில் உள்ள காலக்ஸியான ஆண்ட்ரோமெடாவும் ஒன்றுக்கு ஒன்று மோதிக் கொண்டு அழியப் போவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்தக் கூற்று நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஆனால் தற்போது அப்படிப்பட்ட அழிவு நேர்ந்தால் அது எப்படி அதி பயங்கரமாக இருக்கம் என்பதை ஒரு கம்ப்யூட்ர் சிமுலேஷன் படம் மூலம் விளக்கியுள்ளனர் விஞ்ஞானிகள்.

கம்யூட்டர் படம்...

கம்யூட்டர் படம்...

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சர்வதேச ரேடியோ வானியல் ஆய்வு மையம் இந்த கம்ப்யூட்டர் படத்தை உருவாக்கியுள்ளது. அதைப் பார்க்கும்போதே பயங்கரமான பீதி வருகிறது.

சித்தரிப்பு...

சித்தரிப்பு...

உண்மையான மோதல் நிகழும்போது அது எப்படிப்பட் பாதிப்புகளையும் அலங்கோலங்களையும் ஏற்படுத்தும் என்பதை இதில் சித்தரித்துள்ளனர்.

நட்சத்திரங்களாக மாறும்...

நட்சத்திரங்களாக மாறும்...

இதுகுறித்து மையத்தின் முக்கிய வானியல் நிபுணரான டாக்டர் ஆரோன் ரோபோத்தம் கூறுகையில் அனைத்து காலக்ஸிகளுமே ஆரம்பத்தில் சிறிதாகத்தான் இருக்கும். ஆனால் அதில் வாயுக்கள் இணைய இணைய, அதன் அடர்த்தி அதிகரித்து விஸ்வரூபம் எடுத்து மிகப் பெரியதாக மாறி விடும். அவை நாளடைவில் நட்சத்திரங்களாக மாறி விடும்.

விழுங்கி விடும்...

இதில் மிகப் பெரிய காலக்ஸிகளாக மாறுபவை, சிறிய அளவிலான காலக்ஸிகளை விழுங்கி விடும். அப்படிப்பட்ட நிகழ்வுதான் இன்னும் 5 பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கப் போகிறது என்றார் அவர்.

எது எப்படியோ, அதைக் காணத்தான் நாம் இருக்கப் போவதில்லை !

English summary
Scientists have long known that the nearby galaxy Andromeda and our own Milky Way galaxy will collide in four to five billion years, but now a new computer simulation (above) from the International Centre for Radio Astronomy Research in Western Australia shows what the colossal crash may look like.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X